ரூ.20 லட்சம் நில மோசடி செய்தவர் கைது

Added : செப் 23, 2022 | |
Advertisement
கொளத்துார், :கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ், 36; பெரவள்ளூர் லட்சுமணா கிழக்கில், டீ துாள் வாங்கி விற்கும் குடோன் வைத்து, வியாபாரம் செய்து வருகிறார். மேலும், சொந்த வீடு கட்ட இடம் தேடி வந்தார்.இந்நிலையில், கொளத்துாரை சேர்ந்த லாரன்ஸ் என்பவர், சுரேஷுக்கு அறிமுகமானார். லாரன்ஸ் வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, சின்னத்தாழப்பாடி கிராமத்தைச்


கொளத்துார், :கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ், 36; பெரவள்ளூர் லட்சுமணா கிழக்கில், டீ துாள் வாங்கி விற்கும் குடோன் வைத்து, வியாபாரம் செய்து வருகிறார். மேலும், சொந்த வீடு கட்ட இடம் தேடி வந்தார்.இந்நிலையில், கொளத்துாரை சேர்ந்த லாரன்ஸ் என்பவர், சுரேஷுக்கு அறிமுகமானார். லாரன்ஸ் வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, சின்னத்தாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குரு தண்டபாணி, 40, என்பவர் அறிமுகமானார்.

இதையடுத்து, தனக்குச் சொந்தமான இடத்தை சுரேஷுக்கு விற்க, குரு தண்டபாணி பேச்சு நடத்தினார்.இதில், 91 லட்சம் ரூபாய்க்கு இடம் விலை பேசி முடிக்கப்பட்டு, வங்கி பரிவர்த்தனை வாயிலாக, 20 லட்சம் ரூபாயை, குரு தண்டபாணிக்கு சுரேஷ் முன்பணமாக கொடுத்துள்ளார்.இடத்தை, தன் பெயரில் பதிவு செய்யச் சென்ற போது, அந்த இடம் வேறு நபருக்குச் சொந்தமானது என தெரிந்தது.அதனால் சுரேஷ், பணத்தை திரும்பித் தருமாறு, குரு தண்டபாணியிடம் கேட்டுள்ளார்.

பின், அவர்களுக்குள் 2020 ஜூலை 18ல் பேச்சு நடந்து, பணத்தை திருப்பித் தருவதாக குரு தண்டபாணி உறுதி அளித்திருக்கிறார். ஆனால், இதுவரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். ஏமாற்றமடைந்த சுரேஷ், திரு.வி.க., நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று முன்தினம் இரவு, குரு தண்டபாணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X