மின் திருட்டு அபராதம்ரூ.8 லட்சம் வசூல்| Dinamalar

மின் திருட்டு அபராதம்ரூ.8 லட்சம் வசூல்

Added : செப் 23, 2022 | |
சென்னை, :தமிழக மின் வாரியத்தின் சென்னை மண்டல விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் திருட்டு தொடர்பாக, சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொன்னேரி, ஸ்ரீபெரும்புதுாரில் 13 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அதில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து, 7.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது தவிர, மின் திருட்டில் ஈடுபட்டவர்கள்

சென்னை, :தமிழக மின் வாரியத்தின் சென்னை மண்டல விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் திருட்டு தொடர்பாக, சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொன்னேரி, ஸ்ரீபெரும்புதுாரில் 13 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அதில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து, 7.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது தவிர, மின் திருட்டில் ஈடுபட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து, சமரச தொகையாக கூடுதலாக, 42 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.மின் திருட்டு தொடர்பான தகவல்களை, சென்னை விஜிலென்ஸ் பிரிவு செயற்பொறியாளரிடம் 9445857591 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிவிக்குமாறு, பொது மக்களை மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X