கத்தி வைத்திருந்த மாணவர்களுக்குநுாதனமாய் புத்தி சொன்ன போலீசார்| Dinamalar

'கத்தி' வைத்திருந்த மாணவர்களுக்குநுாதனமாய் 'புத்தி' சொன்ன போலீசார்

Added : செப் 23, 2022 | |
ஓட்டேரி, :புத்தகப்பையில் கத்தி வைத்திருந்த அரசு பள்ளி மாணவர்களை, போலீசார், திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வைத்தனர். சென்னை ஓட்டேரி, படவட்டம்மன் கோவில் தெருவில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு, 10ம் வகுப்பு படிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்கள், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு நடந்து சென்றனர்.அப்போது, ஒரு மாணவர், மற்றொரு மாணவரின் புத்தகப்பையில்,

ஓட்டேரி, :புத்தகப்பையில் கத்தி வைத்திருந்த அரசு பள்ளி மாணவர்களை, போலீசார், திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வைத்தனர். சென்னை ஓட்டேரி, படவட்டம்மன் கோவில் தெருவில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு, 10ம் வகுப்பு படிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்கள், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு நடந்து சென்றனர்.அப்போது, ஒரு மாணவர், மற்றொரு மாணவரின் புத்தகப்பையில், கத்தியை மறைத்து வைத்தார்.அதைக் கண்ட ஒருவர், இது குறித்து, ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.



போலீசார், மாணவர்களின் புத்தகப்பையை சோதனையிட்ட போது, சிறிய கத்தி இருந்தது. விசாரித்த போது, 'வரும் வழியில் கீழே கிடந்தது' என்றனர்.இது குறித்து தகவல் அறிந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், நேற்று காலை, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை அழைத்து விசாரித்தார். பள்ளி நிர்வாகத்திற்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் ஈஸ்வரன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, நுாதன தண்டனையும் கொடுத்தார்.'கல்வி, ஒழுக்கம் தொடர்பான 120 திருக்குறள்களை, 27ம் தேதிக்குள் மனப்பாடம் செய்து வர வேண்டும். அதில், கேட்கப்படும் திருக்குறளை தடையின்றி ஒப்புவிக்க வேண்டும். 'அப்படி செய்யத்தவறினால், மேலும் பல திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும்' எனக் கூறினார்.



மாணவர்களும் அவரது உத்தரவை ஏற்று, பள்ளிக்கு சென்றனர்.கல்லுாரி மாணவர்களின், 'ரூட்டு தல' பிரச்னையால், கத்தி கலாசாரம் அதிகரித்திருப்பது போல், வடசென்னை சுற்றுவட்டார பள்ளி மாணவர்களின் கைகளிலும், கத்தி பழக்கம் ஏற்படுவதை, ஆரம்பத்திலேயே தவிர்க்க, புளியந்தோப்பு போலீசார், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X