தென்மேல்பாக்கம் கம்பத்தில் புதர் மின் விளக்குகள் 'கண்ணடிப்பு'

Added : செப் 23, 2022 | |
Advertisement
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.மகேந்திரா சிட்டி துணை மின் நிலையத்தில் இருந்து, இந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.தென்மேல்பாக்கம்- - சிங்கப்பெருமாள் கோவில் சாலை வழியாக எடுத்து செல்ல, மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.இதில், சிங்கப்பெருமாள் கோவில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள
தென்மேல்பாக்கம் கம்பத்தில் புதர் மின் விளக்குகள் 'கண்ணடிப்பு'

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.மகேந்திரா சிட்டி துணை மின் நிலையத்தில் இருந்து, இந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
தென்மேல்பாக்கம்- - சிங்கப்பெருமாள் கோவில் சாலை வழியாக எடுத்து செல்ல, மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.இதில், சிங்கப்பெருமாள் கோவில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மின் கம்பத்தைச் சுற்றி, முட்புதர்கள் மற்றும் கொடிகள் சூழ்ந்துள்ளன. இதனால், இந்த கம்பத்தில் இரவில் மின் விளக்கு எரிவதில்லை. மேலும், காற்று அடிக்கும் போது அடிக்கடி தீப்பொறிகள் பறக்கின்றன.வாகன ஓட்டிகள் கூறியதாவது:புதர்மண்டி காணப்படும்
மின் கம்பத்தில், விளக்கு எரிவதில்லை. காற்றில் கம்பிகள் ஆடுவதால், அருகிலுள்ள மூன்று கம்பங்களில் போதிய மின்சாரம் கிடைக்காமல் விளக்குகள் விட்டுவிட்டு எரிகின்றன.மின் கம்பிகள் உரசி பறக்கும் தீப்பொறிகளால், சுற்றியுள்ள காப்புக் காடுகளில் தீப்பிடிக்கும் நிலை உள்ளது.மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக, ஒரு நாள் முழுதும் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. ஆனால், மின் கம்பத்தில் உள்ள முட்செடிகள், கொடிகள் அகற்றப்படவில்லை.
பல மாதங்களாக இதுபோலவே உள்ளது.மின் வாரிய அதிகாரிகள், கம்பத்தை சுற்றிஉள்ள புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X