229 மாடுகள் பிடிப்பு| Dinamalar

229 மாடுகள் பிடிப்பு

Added : செப் 23, 2022 | |
சென்னை, :சென்னையில், சாலையில் சுற்றித் திரிந்த 229 மாடுகளை, மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:சென்னையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு ஒரு மாட்டிற்கு தலா, 1,550 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.அந்த வகையில், கடந்த 14ம்

சென்னை, :சென்னையில், சாலையில் சுற்றித் திரிந்த 229 மாடுகளை, மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:சென்னையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு ஒரு மாட்டிற்கு தலா, 1,550 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.



அந்த வகையில், கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை, சாலையில் சுற்றித் திரிந்த 229 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு 3.55 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.எனவே, உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை, சொந்த இடங்களிலேயே கட்டி வைக்க வேண்டும். பொது வெளியில் திரிய விடக் கூடாது. அவ்வாறு விடுவோர் மீது, பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X