மாணவி தற்கொலைபள்ளி முற்றுகை

Added : செப் 23, 2022 | |
Advertisement
பம்மல், :பம்மலை அடுத்த பொழிச்சலுார், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் லதா. அவரது மகள் ஹரிணி, 16. பல்லாவரத்தில் உள்ள அன்னை தெரேசா பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். 21ம் தேதி, பள்ளியில் தேர்வு நடந்த போது, காப்பியடித்து எழுதிய ஹரிணியை ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம், பள்ளி சீருடையில் வீட்டில் ஹரிணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, சங்கர் நகர்
மாணவி தற்கொலைபள்ளி முற்றுகை

பம்மல், :பம்மலை அடுத்த பொழிச்சலுார், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் லதா. அவரது மகள் ஹரிணி, 16. பல்லாவரத்தில் உள்ள அன்னை தெரேசா பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். 21ம் தேதி, பள்ளியில் தேர்வு நடந்த போது, காப்பியடித்து எழுதிய ஹரிணியை ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம், பள்ளி சீருடையில் வீட்டில் ஹரிணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரித்தனர். மாணவியின் உடல், நேற்று முன்தினம் இரவே, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X