நிரந்தர பொதுச்செயலர் பதவி பழனிசாமி அடுத்த அதிரடி

Added : செப் 23, 2022 | |
Advertisement
அடுத்த மாதம் முதல் வாரத்தில் போட்டியின்றி, அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலராக தேர்வாகும் திட்டத்துடன், அடுத்த அதிரடிக்கு பழனிசாமி தயாராகி வருகிறார்.சமீபத்தில், டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க., சட்டவிதிகளை திருத்தி, ஒற்றைத் தலைமை ஏற்படுத்திய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரி, பழனிசாமி சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மனு

அடுத்த மாதம் முதல் வாரத்தில் போட்டியின்றி, அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலராக தேர்வாகும் திட்டத்துடன், அடுத்த அதிரடிக்கு பழனிசாமி தயாராகி வருகிறார்.
சமீபத்தில், டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க., சட்டவிதிகளை திருத்தி, ஒற்றைத் தலைமை ஏற்படுத்திய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரி, பழனிசாமி சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மனு அளித்துள்ளார்.

அம்மனு மீது இம்மாதம் இறுதிக்குள் விசாரணை நடத்தி, தங்களுக்கு ஆதரவாக முடிவு அறிவிக்கப்படும் என, பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர்.அடுத்த மாதம் முதல் வாரத்தில், பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட உள்ளது.



உற்சாக வரவேற்பு



அதில், 10 மாவட்ட செயலர்கள் வழிமொழிய, 10 மாவட்ட செயலர்கள் முன்மொழிய, போட்டிஇன்றி நிரந்தர பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்படுகிறார். பின், அக்., 17ல், அ.தி.மு.க., பொன் விழா ஆண்டு நிறைவு விழா, அவர் பங்கேற்கும் முதல் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. விழாவில், அவருக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர் என, கட்சி வட்டாரங்கள் கூறின.


பா.ஜ.,வுக்கு 15


சமீபத்தில் டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பழனிசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர், ௨2 நிமிடங்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றும், பா.ஜ.,வுடன் தான் கூட்டணி என்றும், அமித் ஷாவிடம் பழனிசாமி உள்ளிட்டோர் உறுதிப்படுத்தி உள்ளனர். பா.ஜ., விரும்பும் தொகுதிகளில் போட்டியிட, 15 'சீட்' ஒதுக்கீடு செய்கிறோம் என்றும், அதற்கு கைமாறாக, தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.தி.மு.க., ஆட்சியின் மீது சரமாரியான புகார்களையும், அவரிடம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X