கசிவு நீர் குட்டையில் மரக்கன்றுகள் நடவு

Added : செப் 23, 2022 | |
Advertisement
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி ஊராட்சிப் பகுதியில், 'நபார்டு' வங்கி மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து, புல்லேரி நீர்வடிப் பகுதி திட்டத்தை செயல்படுத்துகிறது.இதற்காக, கசிவு நீர் குட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றிலும், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.கீரப்பாக்கம், பிளெஸ்சிங்ஸ் மெட்ரிக் இன்டர்நேஷனல் பள்ளி சாரணர், செஞ்சிலுவை மாணவ -
கசிவு நீர் குட்டையில் மரக்கன்றுகள் நடவு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி ஊராட்சிப் பகுதியில், 'நபார்டு' வங்கி மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து, புல்லேரி நீர்வடிப் பகுதி திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதற்காக, கசிவு நீர் குட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றிலும், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.கீரப்பாக்கம், பிளெஸ்சிங்ஸ் மெட்ரிக் இன்டர்நேஷனல் பள்ளி சாரணர், செஞ்சிலுவை மாணவ - மாணவியர் நடத்திய பேரணியை, பள்ளி நிர்வாகி தாமஸ் ஜெயபால் துவக்கினார்.
மாணவ குழுவினர், 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்' என முழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குட்டையைச் சுற்றிலும், 200 மரக்கன்றுகள் நட்டனர்.பள்ளி முதல்வர் சோபியா, ஊராட்சித் தலைவி ஜெயந்தி, தேசிய வேளாண் சமூக ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X