'ஹைடெக்' கண்காணிப்பு கேமராக்கள் ரயில் நிலையங்களில் பொருத்த முடிவு

Added : செப் 23, 2022 | |
Advertisement
சென்னை:குற்றவாளிகள் பட்டியலில் இருப்போர் ரயில் நிலையங்களில் நுழையும் போதே, அவர்களின் படத்தோடு எச்சரிக்கை செய்யும் 'ஹைடெக் சிசிடிவி கேமரா'க்கள் விரைவில் ரயில் நிலையங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெரிய ரயில் நிலையங்களில் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.திருட்டு, கடத்தல், வன்முறை குற்றங்களை

சென்னை:குற்றவாளிகள் பட்டியலில் இருப்போர் ரயில் நிலையங்களில் நுழையும் போதே, அவர்களின் படத்தோடு எச்சரிக்கை செய்யும் 'ஹைடெக் சிசிடிவி கேமரா'க்கள் விரைவில் ரயில் நிலையங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரிய ரயில் நிலையங்களில் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.திருட்டு, கடத்தல், வன்முறை குற்றங்களை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.குற்றவாளிகள் பட்டியலில் இருப்போர், ரயில் நிலையங்களில் நுழையும் போதே, அவர்களின் படத்தோடு எச்சரிக்கை விடுக்கும் 'ஹைடெக்' கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க, ரயில்வே பாதுகாப்பு படை திட்டமிட்டுள்ளது
.அதிநவீன சாப்ட்வேர்கள்இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: பயணியரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ரயில் நிலையங்களின் நுழைவு பகுதிகள், வாகன நிறுத்தம், டிக்கெட் முன்பதிவு மையங்கள், காத்த்திருப்பு அறைகள், நடைமேடைகள் போன்ற பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.
இது தவிர, பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள், நவீன பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்துவது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.பயணியர் அதிகமாக வருகை தரும் முக்கிய ரயில் நிலையங்களில், அதிநவீன கண்காணிப்பு கேமராக்களுடன் அதிநவீன சாப்ட்வேர்களை இணைக்க உள்ளோம்.
இதனால், ஏற்கனவே குற்றவாளிகள் பட்டியலில் இருப்போர், ரயில் நிலைய வளாகத்திற்குள் நுழையும்போது, அவர்களின் புகைப்படத்துடன் எச்சரிக்கை வரும். அந்த வீடியோ காட்சிகளை சேமித்து வைக்கவும் முடியும்.சோதனைஇந்த புது வசதி தொடர்பாக, முதல் கட்டமாக பெங்களூரு உள்ளிட்ட மூன்று ரயில் நிலையங்களில் சோதனை நடந்து வருகிறது.இது, வெற்றிகரமாக முடிந்தவுடன், நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் படிப்படியாக இந்த வசதி கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X