இறந்தும் வாழும் ஹிதேந்திரன் உறுப்பு தானம் விழிப்புணர்வு நாள்

Added : செப் 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருக்கழுக்குன்றம் :செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன் - புஷ்பாஞ்சலி. இப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் ஹிதேந்திரன், 16.கடந்த 2008, செப்., 20ல், வீட்டிற்கு அருகில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, மீன்பாடி வண்டியில் மோதி, தலையில் படுகாயம்அடைந்தார். பரிசோதனையில் மூளைச்சாவு அடைந்து, உயிர் பிழைக்க
இறந்தும் வாழும் ஹிதேந்திரன் உறுப்பு தானம் , நாள்

திருக்கழுக்குன்றம் :செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன் - புஷ்பாஞ்சலி. இப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் ஹிதேந்திரன், 16.கடந்த 2008, செப்., 20ல், வீட்டிற்கு அருகில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, மீன்பாடி வண்டியில் மோதி, தலையில் படுகாயம்அடைந்தார். பரிசோதனையில் மூளைச்சாவு அடைந்து, உயிர் பிழைக்க வாய்ப்பில்லாதது தெரிந்தது. ஹிதேந்திரனின் இதயம், கண்கள், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை செப்., 23ல், தானம் அளித்தனர்.

இந்த நிகழ்வு, உடல் உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வை, மக்களிடம் பரவலாக கொண்டு சென்றது. இந்நிகழ்விற்கு பிறகே, விபத்து உள்ளிட்ட வகையில் காயமடைவோரின் மூளை செயலிழந்தால், அவரது இதயம், கண்கள், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுவது அதிகரித்து, தொடர்கிறது.உடல் உறுப்புகள் தானம் குறித்து மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 2018ல், ஹிதேந்திரன் உடலுறுப்பு தானத்தை, 6ம் வகுப்பு தமிழ் பாடத்தில், பாடமாக தமிழக அரசு வைத்தது.திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரில், ஹிதேந்திரன் வசித்த தெருவுக்கு, அவரது பெயர் சூட்டப்பட்டது. மேலும் ஹிதேந்திரனின் நினைவாக, செப்., 23 தேதியை உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினமாக அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

அவரது நினைவு நாளான நேற்று, ஹிதேந்திரனின் தந்தை அசோகன் கூறியதாவது:ஹிதேந்திரன் என்றால், இதயத்தை கொள்ளை கொள்பவன் என பொருள். ஹிதேந்திரனின் உறுப்புகள், செப்., 23ல் அகற்றப்பட்ட நாளை, நினைவு தினமாக கடைப்பிடிக்கிறோம். அறக்கட்டளை துவக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். உறுப்பு பாதிக்கப்பட்டோர், இத்தானத்தால் உயிர் வாழ்வர்.பள்ளி, மருத்துவமனை உள்ளிட்டவற்றில், செப்., 23ல் இதை கடைப்பிடித்து, உறுதிமொழி ஏற்கவும், பேச்சு, கட்டுரை என, விழிப்புணர்வு போட்டிகள் நடத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
24-செப்-202212:14:36 IST Report Abuse
Anumanthan Gnanasekaran My sister's son, 26 yrs, also met with accident this year in April and organs are donated. Eyes, heart, lungs, kidneys, liver and even they taken skin from him. Very sad and painful moment in life when they harvest while he is still alive. But I support organ donations.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X