மத்திய அரசு பணி தேர்வுசெங்கையில் இலவச பயிற்சி | Dinamalar

மத்திய அரசு பணி தேர்வுசெங்கையில் இலவச பயிற்சி 

Added : செப் 23, 2022 | |
செங்கல்பட்டு:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, செங்கல்பட்டில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசு அலுவலங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித் துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

செங்கல்பட்டு:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, செங்கல்பட்டில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசு அலுவலங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித் துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


நாடு முழுதும் 20 ஆயிரத்துக்கும் மேலான காலி இடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரிகளாகவும், 2022 ஜனவரி 1ம் தேதிப்படி 18 முதல் 27 வயதுக்குள் இருப்போராகவும் இருக்க வேண்டும்.இதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ஐந்து வயது தளர்வு உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று வயதும், மாற்றுத்திறனாளிகளுக்கு, 10 வயது தளர்வும் அளிக்கப்பட்டு உள்ளது.


விருப்பமுள்ளோர், https;//ssc.nic.in என்ற இணையதளத்தில், அக்., 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, மேற்கண்ட போட்டி தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.


இதில் பயில நினைப்போர் 044 - 2742 6020 என்ற தொலைபேசி எண்ணில், வரும் 26ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி துவங்கும் தேதி, மொபைல் போன் குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X