காங்., தலைவர் தேர்தலில் அசோக் கெலாட்! போட்டி

Updated : செப் 25, 2022 | Added : செப் 23, 2022 | கருத்துகள் (11+ 43) | |
Advertisement
கொச்சி:அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், ராஜஸ்தான் முதல்வரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிடப் போவதாக நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். முன்னாள் தலைவர் ராகுலை போட்டியிட வைக்க நடந்த, கடைசி கட்ட சமரச முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. 'தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை' என, ராகுல் உறுதிபட கூறியுள்ளார். தேர்தலில்
காங்., தலைவர் தேர்தல் ,அசோக் கெலாட், போட்டி

கொச்சி:அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், ராஜஸ்தான் முதல்வரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிடப் போவதாக நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். முன்னாள் தலைவர் ராகுலை போட்டியிட வைக்க நடந்த, கடைசி கட்ட சமரச முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

'தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை' என, ராகுல் உறுதிபட கூறியுள்ளார். தேர்தலில் மேலும் பல மூத்த தலைவர்கள் குதிக்க உள்ளதை அடுத்து, கடும் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுலை போட்டியிட வைத்து, அவரை மீண்டும் தலைவராக்கும் முயற்சியில் பல மூத்த காங்., தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால், 'தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை' என ராகுல் கூறி வந்தார். இருந்தாலும், கடைசி நேரத்தில் அவரை சம்மதிக்க வைத்துவிடலாம் என மூத்த தலைவர்கள் கருதினர்.


இந்நிலையில், கேரளாவில் 'ஒற்றுமை யாத்திரை'யில் ஈடுபட்டுள்ள ராகுலிடம், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலமுறை பேச்சு நடத்தினர். அவர் தன் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ராஜஸ்தான் முதல்வரும், மூத்த காங்., தலைவருமான அசோக் கெலாட், தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், ராகுலை தலைவராக்கும் முயற்சியில் அசோக் கெலாட்டும் தீவிரம் காட்டி வந்தார். கடைசி முயற்சியாக ராகுலை நேரில் சந்தித்து, அவரை சமரசம் செய்ய அசோக் கெலாட் முடிவு செய்தார்.
இதற்காக கேரளா புறப்பட்டு வந்த அவர், கொச்சியில் நடைபயணத்தில் உள்ள ராகுலை நேற்று சந்தித்து பேசினார்.


சமரச முயற்சி தோல்வி



ஆனால், கெலாட்டின் கோரிக்கையை ராகுல் நிராகரித்தார். இதையடுத்து, ராகுலை தலைவராக்கும் கடைசி கட்ட சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். ராஜஸ்தான் சென்றதும், வேட்பு மனு தாக்கலுக்கான நாள் குறித்து முடிவு செய்வேன். மற்ற காங்கிரஸ் நண்பர்களும் என்னை எதிர்த்து போட்டியிடுவர். இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், கட்சியை அனைத்து மட்டத்திலும் வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நாம் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வேண்டும். கட்சித் தலைவர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்பதை காங்., இடைக்கால தலைவர் சோனியாவும், ராஜஸ்தான் காங்., பொறுப்பாளர் அஜய் மாக்கனும் முடிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

'விமர்சனம் வேண்டாம்'

காங்., தலைவர் பதவிக்கான தேர்தலில், அசோக் கெலாட்டை எதிர்த்து, அக்கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காங்., செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறுகையில், 'சோனியா மருத்துவமனையில் இருந்தபோது, அதிருப்தி குழுவினருடன் இணைந்து அவருக்கு தொடர்ந்து கடிதம் எழுதியது தான், சசி தரூர் கடந்த எட்டு ஆண்டுகளில் கட்சிக்காக செய்த ஒரே காரியம்' என கருத்து கூறினார்.இது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காங்., பொதுச் செயலரும், செய்தித் தொடர்பு பிரிவு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:தலைவர் பதவிக்கு போட்டியிடும் நம் கட்சித் தலைவர்கள் குறித்து எவ்வித கருத்துக்கள், விமர்சனங்களை தெரிவிக்க வேண்டாம் என, செய்தி தொடர்பு துறையில் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
24-செப்-202218:52:23 IST Report Abuse
DVRR மண்ணு மோகன் சிங்கி பிரதமராக இருக்கும் போது இவர்கள் தின ஊழல் கொள்ளை கமிஷன் வருமானம் ரூ 100 கோடி ஆனால் இப்போ நிஜமாகவே ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மியாகி விட்டது. ஆகவே இந்த மாதிரி அசோக் கல்லா ஒரு வேலை முஸ்லீம் நேரு காங்கிரசின் தலைவர் ஆனால் கல்லா கட்டலாம் என்று ஒரு நம்பிக்கை தான் இவர்களுக்கு
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
24-செப்-202212:24:07 IST Report Abuse
Narayanan ஆளும் அரசை குறை சொல்லியே காலத்தை ஓட்ட ராகுல் இருக்கிறார் . கட்சியையே கையில் எடுக்க பயப்படும் இவர் எப்படிமுக்கிய பதவியில் வருவார் ? இவரின் இந்த நடை பயணம் மொத்த பயனில்லாதது .வெட்கம்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
24-செப்-202210:57:12 IST Report Abuse
Anand நம்ம ஜோதிமணி அக்கா தான் சிறந்த தேர்வாக இருக்கும்....இவனெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X