மாமல்லபுரம், கோவளத்தில் சட்டசபை குழுவினர் ஆய்வு

Added : செப் 23, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில், சிற்பக்கலைத் துாண் உள்ளது. மாமல்லபுரத்திற்கு, உலக கற்சிற்ப நகர புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றதன் அடையாளமாக, தமிழ்நாடு கைவினைத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின், பூம்புகார் நிறுவனம், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், இதை அமைத்துள்ளது.சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தபோது, முதல்வர் ஸ்டாலின், இதை
மாமல்லபுரம், கோவளத்தில் சட்டசபை குழுவினர் ஆய்வு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில், சிற்பக்கலைத் துாண் உள்ளது.
மாமல்லபுரத்திற்கு, உலக கற்சிற்ப நகர புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றதன் அடையாளமாக, தமிழ்நாடு கைவினைத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின், பூம்புகார் நிறுவனம், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், இதை அமைத்துள்ளது.சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தபோது, முதல்வர் ஸ்டாலின், இதை திறந்தார்.
சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, உறுப்பினர்கள் வேல்முருகன், சிந்தனைசெல்வன், ராஜா, அருண்குமார், மரகதம் ஆகியோர், நேற்று, இத்துாணை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, அரசு கட்டட மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில், இக்குழுவினர் பார்வையிட்டனர்.கல்லுாரி பாடப்பிரிவுகள், நடைமுறை செயல்பாடுகள் குறித்து கேட்டு, மாணவ கலைத்தொழில் பயிற்சி முறையை கண்டனர்.

மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், 'இக்கல்லுாரிக்கு 27 ஏக்கர் பரப்பு இடம் உள்ளது. மாணவியருக்காக தனி விடுதி அமைக்க, அரசிடம் முறையிட்டுள்ளனர். இதற்காக பார்வையிட்டோம். இதுகுறித்து, அரசிடம் பரிந்துரைப்போம்' என்றனர்.
பின், திருப்போரூர் ஒன்றியத்திற்கு வந்த தமிழக சட்டசபை பேரவை பொது மதிப்பீட்டு குழுவினர், கோவளம் 'புளூ பீச்' பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.இதில், உள் வளாக நடைபாதை, சோலார் பவர் பேனல் வசதியுடன் மின்சாரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அமரும் மேஜைகள், 'சிசிடிவி' கேமரா, பிளாஸ்டிக் அரவை இயந்திரம், சுற்றுலா பயணியர் வருகை, தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X