நள்ளிரவில் கதவை உடைத்து புகுந்த திருடர்கள்:குடும்பத்தினரை மிரட்டி நகைகள் கொள்ளை

Added : செப் 23, 2022 | |
Advertisement
அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார், மருவூர் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 52; அச்சிறுபாக்கம் மின் வாரிய ஊழியர். இவர், நேற்று இரவு, மனைவி ஜெயா, மகன் மற்றும் மகளுடன், வீட்டில் உறங்கினார்.நள்ளிரவு 2:00 மணிக்கு, அவரது வீட்டின் முன்பக்க கதவை, கடப்பாரையால் உடைத்து உள்ளே வந்த 10 மர்ம நபர்கள், குடும்பத்தினரின் கைகள், கால்கள் மற்றும் வாயை, துணியால்
நள்ளிரவில் கதவை உடைத்து புகுந்த திருடர்கள்:குடும்பத்தினரை மிரட்டி நகைகள் கொள்ளை

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார், மருவூர் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 52; அச்சிறுபாக்கம் மின் வாரிய ஊழியர். இவர், நேற்று இரவு, மனைவி ஜெயா, மகன் மற்றும் மகளுடன், வீட்டில் உறங்கினார்.
நள்ளிரவு 2:00 மணிக்கு, அவரது வீட்டின் முன்பக்க கதவை, கடப்பாரையால் உடைத்து உள்ளே வந்த 10 மர்ம நபர்கள், குடும்பத்தினரின் கைகள், கால்கள் மற்றும் வாயை, துணியால் கட்டினர். பின், அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பணம், நகை இருக்கும் இடத்தை கேட்டனர்.
தொடர்ந்து, 8 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி மற்றும் 80 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்தனர்.மர்ம நபர்கள், 'நாங்கள் சென்ற 10 நிமிடங்களுக்கு பின் வெளியே வர வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்' என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
கொள்ளையர்கள் சென்ற பின் வெளியே வந்த ஹரிஹரன், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் அளித்தார்.இதையடுத்து அங்கு வந்த போலீசார், கொள்ளை குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.ஒரு குடும்பத்தினரையே கட்டி போட்டு, சினிமா பாணியில் கொள்ளை நடந்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X