'மாஜி' ராணுவ வீரர்கள் குடும்ப நிதி உயர்வு

Added : செப் 23, 2022 | |
Advertisement
சென்னை:முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, போரில் உயிரிழப்போர் உறவினருக்கான உதவித் தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்க, தமிழக முன்னாள் படை வீரர்கள் தொகுப்பு நிதிக்கான மாநில மேலாண்மை குழு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் தொகுப்பு நிதிக்கான மாநில மேலாண்மை குழு கூட்டம், கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி தலைமை
'மாஜி' ராணுவ வீரர்கள் குடும்ப நிதி உயர்வு

சென்னை:முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, போரில் உயிரிழப்போர் உறவினருக்கான உதவித் தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்க, தமிழக முன்னாள் படை வீரர்கள் தொகுப்பு நிதிக்கான மாநில மேலாண்மை குழு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் தொகுப்பு நிதிக்கான மாநில மேலாண்மை குழு கூட்டம், கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி தலைமை வகித்தார். தலைமைச் செயலர்இறையன்பு, பொதுத் துறை செயலர் ஜகன்நாதன் மற்றும் முப்படை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், போரில் உயிரிழப்போரின் உறவினருக்கான உதவித்தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாய்; ஊனமடைந்தோருக்கு உதவித்தொகையை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.
முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி வழங்க தீர்மானிக்கப்பட்டது. நலத் திட்ட உதவிகள் குறித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்துக்கு விழிப்பணர்வு ஏற்படுத்த, கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது. கவர்னர் ரவி பேசும்போது, பாதுகாப்பு காவலர், டிரைவர் போன்றோரின் அனுபவங்கள் மற்றும் சேவைகளை, சிறந்த முறையில் பயன்படுத்தக் கூடிய சாத்தியமான பகுதிகளை ஆராயும்படி வேண்டுகோள் விடுத்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X