'தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்கள் பங்கு'காட்டாங்கொளத்துாரில் தேசிய கருத்தரங்கு

Added : செப் 23, 2022 | |
Advertisement
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 'தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு' தேசிய கருத்தரங்கு, நடந்தது. பல்கலையின் தமிழ் பேராயம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.ஆர்.எம்., வளாக நிர்வாகி அருணாசலம் வரவேற்புரை வழங்கினார்.எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தரும், பெரம்பலுார் எம்.பி.,யுமான பாரிவேந்தர் தலைமை ஏற்றார்.கயிலை மாசிலாமணி
'தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்கள் பங்கு'காட்டாங்கொளத்துாரில் தேசிய கருத்தரங்கு

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 'தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு' தேசிய கருத்தரங்கு, நடந்தது. பல்கலையின் தமிழ் பேராயம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.ஆர்.எம்., வளாக நிர்வாகி அருணாசலம் வரவேற்புரை வழங்கினார்.
எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தரும், பெரம்பலுார் எம்.பி.,யுமான பாரிவேந்தர் தலைமை ஏற்றார்.கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலம் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீனம், ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆதீனங்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை சன்னிதானம் பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட ஆதீனங்கள் பேசியதாவது:சைவ சமய மடங்கள் மற்றும் சைவ ஆதீனங்கள், சைவ சித்தாந்தத்தை வளர்ப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டவை. இது போன்ற மடாலயங்கள் 16ம் நுாற்றாண்டு முதல் முதல் தோன்றின.ஆதீனங்களில் மதுரை ஆதீனம் மிக தொன்மையானது.
கடந்த 1,500 ஆண்டுகளுக்கு முன், சைவ நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்மந்தரால் தோற்றுவிக்கப்பட்டதாக, வரலாற்று பதிவில் அறிய முடிகிறது.திருவண்ணாமலை ஆதீனம், தமிழகத்தில் சைவமும் தமிழும் ஒருங்கே வளர்க்க கட்டமைக்கப்பட்ட பக்தி இலக்கிய காலங்களில் முதன்மையானது. இந்த ஆதீனம் 11ம் நுாற்றாண்டில் துவக்கப்பட்டது.மனித நிலையில் இருந்து இறை நிலையை அடைய உதவும் வாழ்வியல் ஒழுக்கங்களை கற்பிக்கின்றன.சிவம் என்ற சொல், நுாற்றாண்டு சொல்லாக மாறி, சைவம் என்று மாறியதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
தொடர்ந்து, ஆதீனங்கள் இணைந்து, வெள்ளியால் ஆன செங்கோலை, எம்.பி., பாரிவேந்தருக்கு வழங்கினர்.மேலும், எஸ்.ஆர்.எம்., பல்கலையில் இலவச கல்விக்கான காசோலைகளை, 300 மாணவர்களுக்குஎம்.பி., வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X