கல்லுாரியில் போதை விழிப்புணர்வு| Dinamalar

கல்லுாரியில் போதை விழிப்புணர்வு

Added : செப் 23, 2022 | |
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த, பையனுார் பகுதி, ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லுாரியில், போதை பழக்க தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இது தொடர்பாக, நேற்று நடந்த நிகழ்ச்சியை, முதல்வர் செல்வகுமார் துவக்கினார். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன், போதை பழக்க தீமைகள், இப்பழக்கத்தை தவிர்ப்பது, இதற்கு அடிமையானவர்களை விடுவிக்க செய்ய வேண்டியது உள்ளிட்டவை

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த, பையனுார் பகுதி, ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லுாரியில், போதை பழக்க தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக, நேற்று நடந்த நிகழ்ச்சியை, முதல்வர் செல்வகுமார் துவக்கினார். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன், போதை பழக்க தீமைகள், இப்பழக்கத்தை தவிர்ப்பது, இதற்கு அடிமையானவர்களை விடுவிக்க செய்ய வேண்டியது உள்ளிட்டவை குறித்து விளக்கி, விழிப்புணர்வுஏற்படுத்தினார்.


கீழ்கட்டளை, போதை மறுவாழ்வு மைய தன்னார்வலர் சாய் அரவிந்த், போதை பழக்க தீமைகள் குறித்து குறும்படம் திரையிட்டு விளக்கினார்.நாட்டுநலப் பணி திட்ட சிறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.துணை முதல்வர் சங்கீதா, பேராசிரியர் சுரேந்திரபாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், 'ஏற்றம்' அறக்கட்டளை நிர்வாகிகுணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X