நவீன சலவையகம் அமைக்கவிண்ணப்பம் பெறலாம்!

Added : செப் 24, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 நபர்களை உடைய குழு அமைக்க வேண்டும்.இந்த குழுவிற்கு, நவீன சலவையகங்கள் அமைக்க, தலா ௩ லட்சம் ரூபாய் வீதம், தமிழகம் முழுதும், 35 அலகுகள் ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இத்திட்டத்தில், பயன்பெற விரும்புவோர், 10 நபர்களை உடைய

செங்கல்பட்டு:பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 நபர்களை உடைய குழு அமைக்க வேண்டும்.
இந்த குழுவிற்கு, நவீன சலவையகங்கள் அமைக்க, தலா ௩ லட்சம் ரூபாய் வீதம், தமிழகம் முழுதும், 35 அலகுகள் ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இத்திட்டத்தில், பயன்பெற விரும்புவோர், 10 நபர்களை உடைய குழுவாக இருக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக பயிற்சி பெற்ற நபர்களை உடைய குழுவாக இருக்க வேண்டும்.
உறுப்பினர்கள் முன் அனுபவமும், 20 வயது நிரம்பியவர்களாகவும் இருப்பது அவசியம். ஆண்டு வருமானம் ௧ லட்சம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும்.பயன்பெற விரும்புவோர் குழுவாக, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.இத்தகவலை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X