காட்டுக்குடியிருப்பு கண்மாயில் அமலைச்செடிகளால் சிக்கல்

Added : செப் 24, 2022 | |
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அருகேயுள்ள காட்டுக்குடியிருப்பு கண்மாய் பகுதியில் அமலைசெடிகள் நிரம்பியுள்ளதால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிவகங்கை அருகேயுள்ளது காட்டுக்குடியிருப்பு இப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு மழைக் காலங்களில் நிலங்களில் உள்ள ஊற்று நீர் தேங்கி காட்டுக் குடியிருப்பு கண்மாய்க்கு சென்று சேர்கிறது. இதன் காரணமாக கண்மாய்களில் நீர்பிடிப்பு

சிவகங்கை : சிவகங்கை அருகேயுள்ள காட்டுக்குடியிருப்பு கண்மாய் பகுதியில் அமலைசெடிகள் நிரம்பியுள்ளதால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அருகேயுள்ளது காட்டுக்குடியிருப்பு இப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு மழைக் காலங்களில் நிலங்களில் உள்ள ஊற்று நீர் தேங்கி காட்டுக் குடியிருப்பு கண்மாய்க்கு சென்று சேர்கிறது. இதன் காரணமாக கண்மாய்களில் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் அமலைச்செடிகள் வளர்ந்துள்ளதால் தண்ணீர்தேக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிய நீரையும் அமலைச் செடிகள் விரைவில் உறிஞ்சி விடுகிறது.

இதன் காரணமாக பாசன நிலங்களுக்கு பயன் பெற முடியாத நிலை உள்ளது.காட்டுக்குடியிருப்பு கண்மாய் துார்வாரி பல ஆண்டு ஆகிறது. தற்போது கணமாய் மண் மேடாகியுள்ளது. அதிகளவில் தண்ணீர் தேக்க முடியவில்லை. இந்த கண்மாயை துார் வாரி ஆழப்படுத்தி அமலைச்செடிகளை அகற்ற வேண்டும், என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X