கழிவுநீர் தேக்கத்தால் விவசாய நிலம் பாதிப்பு| Dinamalar

கழிவுநீர் தேக்கத்தால் விவசாய நிலம் பாதிப்பு

Added : செப் 24, 2022 | |
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சியில் வீடுகளின் கழிவுநீர் முஸ்தபாபுரம்அருகே விவசாய நிலங்களில் தேங்குவதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.முதுகுளத்தூரில் 5000 குடும்பங்கள் வசிக்கின்றனர். 300 கடைகள் உள்ளன. இங்கு வீடுகள்,கடைகளின் கழிவு நீர் கால்வாய் வழியாக முதுகுளத்தூர்--ராமநாதபுரம் சாலை முஸ்தபாபுரம் அருகே விவசாய நிலத்தில் தேங்கியுள்ளது.பேரூராட்சி
கழிவுநீர் தேக்கத்தால் விவசாய நிலம் பாதிப்பு

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சியில் வீடுகளின் கழிவுநீர் முஸ்தபாபுரம்அருகே விவசாய நிலங்களில் தேங்குவதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.



முதுகுளத்தூரில் 5000 குடும்பங்கள் வசிக்கின்றனர். 300 கடைகள் உள்ளன. இங்கு வீடுகள்,கடைகளின் கழிவு நீர் கால்வாய் வழியாக முதுகுளத்தூர்--ராமநாதபுரம் சாலை முஸ்தபாபுரம் அருகே விவசாய நிலத்தில் தேங்கியுள்ளது.பேரூராட்சி கவுன்சிலர் சேகர் கூறுகையில், கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.ஒரு சில விவசாயிகள் நிலத்தை தரிசாக விட்டுஉள்ளனர்.



மீனாட்சிபுரம் அருகே சாலையோரம் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்குவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே விவசாய நிலம் அருகே கழிவு நீர் தேங்காமல் மாற்று வழி ஏற்படுத்தவும், முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு​ உட்பட்ட தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்​.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X