வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை; நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா எச்சரித்தார்.நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, கமிஷனர் எம்.செல்வராஜ் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் தேவைக்காக குடிநீர், வடிகால் வசதி, சாலை, கழிவு நீர் சுத்திகரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக

கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா எச்சரித்தார்.

நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, கமிஷனர் எம்.செல்வராஜ் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் தேவைக்காக குடிநீர், வடிகால் வசதி, சாலை, கழிவு நீர் சுத்திகரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக கீழக்கரை நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு கட்டடங்கள், வணிக கட்டடங்களில் உரிமையாளர்கள் சிலர் செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தினால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்படுகிறது.நடப்பு நிதியாண்டு முதல் அரையாண்டு முடிவடைய குறுகிய காலமே உள்ள நிலையில் இதுவரை சொத்து வரி, காலி மனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை திடக்கழிவு, மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை அப்புறப்படுத்துவதற்கான கட்டண பாக்கி ரூ.3 கோடியே 39 லட்சத்து 37 ஆயிரம் உள்ளது.

இதில், இதுவரை ரூ.45 லட்சத்து 3000 மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. சிலர் செலுத்த வேண்டியவரியை முறையாக செலுத்தவில்லை. எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வோடு செப்.30க்குள் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில்அல்லது tnurbanepay.tn.gov.in என்ற ஆன்லைன் மூலம் வரியை நிலுவையின்றி செலுத்தவேண்டும். இதன் மூலம் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும், என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X