ஆண் சடலம் மீட்பு:போலீசார் விசாரணை | Dinamalar

ஆண் சடலம் மீட்பு:போலீசார் விசாரணை 

Added : செப் 24, 2022 | |
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் குட்டையில், கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டியில் இருந்து பணிக்கம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள குட்டையில், ஆண் சடலம் கிடப்பதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருடன்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் குட்டையில், கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டியில் இருந்து பணிக்கம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள குட்டையில், ஆண் சடலம் கிடப்பதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருடன் இணைந்து சடலத்தை மீட்டனர்.35 - 40 வயது மதிக்கத்தக்க நபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்தவர் யார்; இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X