கட்டாய மதமாற்ற விவகாரம் மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுடில்லி,:கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.புதுடில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு:நாடு முழுதும் கட்டாய மதமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் தருவதாக

புதுடில்லி,:கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.புதுடில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு:நாடு முழுதும் கட்டாய மதமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் தருவதாக ஏமாற்றியும், மிரட்டியும் மதமாற்றம் செய்து வருகின்றனர்.

இந்தச் செயலை தடுக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கியஅமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அஸ்வனி குமார் துபே ஆஜராகி வாதாடினார். இதையடுத்து, மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு நவ., 14க்குள் பதில் அளிக்குமாறு, மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஆசிரியைகள் கைது

உத்தர பிரதேசத்தின் சம்பால் மாவட்ட எஸ்.பி., சக்ரேஷ் மிஸ்ரா கூறியதாவது:இம்மாவட்டத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கிறிஸ்துவ மிஷனரி பள்ளி ஆசிரியைகள் ரோஸ் மேரி, ஜெஸ்ஸா ஆகியோர், அங்கிருந்த ஹிந்து கடவுள் -படங்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணை கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்தப்பெண் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்து, ஆசிரியைகளை கைது செய்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X