பரம்பிக்குளம் அணையில் தொடர்ந்து 4வது நாளாக நீர் வெளியேற்றம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், நேற்று நான்காவது நாளாக தொடர்ந்து நீர் வெளியேறியது.பொள்ளாச்சி, டாப்சிலிப் அருகேயுள்ள பரம்பிக்குளம் அணையில், கடந்த, 20ம் தேதி இரவு, 1:30 மணிக்கு மதகு பகுதியில், சங்கிலி அறுந்து, பக்கவாட்டு சுவருடன் ஷட்டர் உடைந்தது. அணையின், 72 அடி உயரத்தில், 71.57 அடி நீர்மட்டம் இருந்ததால், மதகு வழியாக அதிகப்படியான நீர் வெளியேறி, ஆற்றில்

பொள்ளாச்சி:பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், நேற்று நான்காவது நாளாக தொடர்ந்து நீர் வெளியேறியது.பொள்ளாச்சி, டாப்சிலிப் அருகேயுள்ள பரம்பிக்குளம் அணையில், கடந்த, 20ம் தேதி இரவு, 1:30 மணிக்கு மதகு பகுதியில், சங்கிலி அறுந்து, பக்கவாட்டு சுவருடன் ஷட்டர் உடைந்தது. அணையின், 72 அடி உயரத்தில், 71.57 அடி நீர்மட்டம் இருந்ததால், மதகு வழியாக அதிகப்படியான நீர் வெளியேறி, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அணையில் மதகு சேதமடைந்த பகுதியை அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த அணைகள் பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று, நான்காவது நாளாக தொடர்ந்து தண்ணீர் வெளியேறியது. அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பரம்பிக்குளம் அணையில் இருந்து, 11 அடி நீர் வெளியேறியுள்ளது. இன்னும், 16 அடி நீர் வெளியேற வேண்டும். வினாடிக்கு, 8,500 கனஅடி நீர் வெளியேறுகிறது. இன்று (நேற்று) மதியம், நீர்மட்டம், 60 அடியாக குறைந்தது. நீர்மட்டம் குறைவதற்கு ஏற்ப, வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்படுகிறது.சேதமடைந்த ஷட்டருக்கு மாற்றாக, புதியதாக ஷட்டர் அமைக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளுதல், மதிப்பீடு தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X