குறையாத பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்; தடை அறிவித்தும் கண்காணிப்பில்லை

Added : செப் 24, 2022 | |
Advertisement
ராஜபாளையம் : மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டினை குறைக்க தடையை மீறும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரிகள் மூலம் பொது மக்களிடையே தடையின்றி பயன்படுத்தப்பட்டு

ராஜபாளையம் : மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டினை குறைக்க தடையை மீறும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரிகள் மூலம் பொது மக்களிடையே தடையின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது.மாநில அரசு ஏற்கனவே முழு தடை விதித்த நிலையில் மத்திய அரசும் கடந்த ஜூலை 1-முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு தடை அறிவித்தது.இதனால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் தடை அறிவிப்பை மீறி உணவகங்கள், பூக்கடைகள், ரோட்டோர தள்ளுவண்டிகள், பழக்கடைகள், டீக்கடை, ஜவுளிக்கடைகள் என எந்த தடையும் இன்றி புழக்கத்தில் சுற்றி வருகிறது.இதனால் இதில் வைக்கப்படும் உணவு பொருட்களுக்காக கால்நடைகள், வனவிலங்குகள், நிலத்தடி நீரை தடுப்பதால் பயிர்களுக்கு பாதிப்பு, சூடான உணவு பொருட்களை கையாள்வதால் புற்று நோய், குப்பைகளில் எரிப்பதால் சுவாசக் கோளாறு, கழிவு நீர் சாக்கடைகளில் அடைப்பினால் சுகாதார கேடு என பல்வேறு பிரச்சனைகள் தொடர்கின்றன.

அரசுக்கு கணக்கு காட்ட என அதிகாரிகள் எப்போதாவது ஒருமுறை ரெய்டு சென்று பறிமுதல் செய்ததாகவும், அபராதம் விதித்ததாக கணக்கு காட்டி கடமையை முடிக்கின்றனர்.அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் மறு சுழற்சிக்கு உபயோகமில்லாத பிளாஸ்டிக் அரக்கனை உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு வெளிவராத வகையில் கடும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X