பொள்ளாச்சியில் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி வரும் 30ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது

Added : செப் 24, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:புரட்டாசி பிறந்தாச்சு; அடுத்து வரும் ஐப்பசியில் தீபாவளி பண்டிகைக்கு இப்பவே, வீட்டு உபயோக பொருட்களை வாங்கலாம். எங்கே என, யோசிக்கறீங்களா... பொள்ளாச்சியில் 'தினமலர்' நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' நுகர்வோர் கண்காட்சியில் தான். வரும், 30ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு நடக்கும் கண்காட்சியை கொண்டாடுங்க மக்களே!உலகையே உலுக்கிய கொரோனா தாக்கத்துக்கு பின்,

பொள்ளாச்சி:புரட்டாசி பிறந்தாச்சு; அடுத்து வரும் ஐப்பசியில் தீபாவளி பண்டிகைக்கு இப்பவே, வீட்டு உபயோக பொருட்களை வாங்கலாம். எங்கே என, யோசிக்கறீங்களா... பொள்ளாச்சியில் 'தினமலர்' நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' நுகர்வோர் கண்காட்சியில் தான். வரும், 30ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு நடக்கும் கண்காட்சியை கொண்டாடுங்க மக்களே!உலகையே உலுக்கிய கொரோனா தாக்கத்துக்கு பின், இயல்பு நிலை திரும்பியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக அனுபவிக்க இயலாத 'ஷாப்பிங்' அனுபவத்தை ஈடுகட்டும் மக்களின் மனப்போக்கு, கடை வீதிகளில் அலைமோதும் கூட்டத்தில் தெரிகிறது.பொள்ளாச்சி மக்களின் தீராத 'ஷாப்பிங்' வேட்கைக்கு, விதவிதமாய் விருந்து படைக்கும் வகையில், 'தினமலர்' சார்பில் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2022' மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்களின் நுகர்வோர் கண்காட்சி, வரும் 30ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கவுள்ளது.பொள்ளாச்சி - கோவை ரோட்டிலுள்ள, ஸ்ரீ கந்த மஹாலில், நடக்கவுள்ள இந்த கண்காட்சியில், கலர்புல்லான, கலக்கலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் பிரபலமான நிறுவனங்கள் சார்பில், நேரடியாக அரங்கங்களை அமைக்கவுள்ளன.வெளிநாட்டு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பலரும் கண்காட்சியில் தங்கள் பொருட்களை அதிரடி சலுகை விலைகளில் விற்பனை செய்யவுள்ளனர்.கண்காட்சியில், 70க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, எல்லா வயதினரையும் குஷிப்படுத்தும், மேஜிக் ஷோ, ஜக்லர்ஸ் ஷோ, ஒட்டக சவாரி, கிட்ஸ் பிளே ஏரியா என பல விதமான பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெறுகின்றன.உணவுப் பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களின் ஸ்பெஷல்களை கொண்ட ஸ்டால்களுடன், உணவுத் திருவிழாவும் இந்த கண்காட்சியில் நடத்தப்படவுள்ளது. கண்காட்சிக்குப் போனால், கலர்புல்லாக 'ஷாப்பிங்' செய்வதுடன், கலகலப்பாக பொழுதையும் கழித்து வரலாம் என்பதற்கு 'கியாரண்டி' அளிக்கும் வகையில், வெகு சிறப்பாக நிகழவுள்ளது.கண்காட்சி, வரும் 30ம் தேதியில் இருந்து, அக்., 2ம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 10:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.விடுமுறை நாட்களில் குதுாகலத்துக்கும், கொண்டாட்டத்துக்கும் தயாராகுங்கள்... பொள்ளாச்சி மக்களே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X