பசுமை தமிழ்நாடு மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
தாம்பரம்:தாம்பரத்தை அடுத்த வண்டலுாரில், பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், இன்று காலை துவக்கி வைக்கிறார்.வனத்துறை மூலம், 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த, ஈர நிலத்திட்டம் செயல்படுகிறது. அதேபோல், பசுமை தமிழ்நாடு இயக்கம் துவக்கப்பட்டு, அடுத்த ௧௦ ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும், 32 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக,

தாம்பரம்:தாம்பரத்தை அடுத்த வண்டலுாரில், பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், இன்று காலை துவக்கி வைக்கிறார்.
வனத்துறை மூலம், 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த, ஈர நிலத்திட்டம் செயல்படுகிறது. அதேபோல், பசுமை தமிழ்நாடு இயக்கம் துவக்கப்பட்டு, அடுத்த ௧௦ ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும், 32 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, இந்தாண்டு, 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாற்றாங்கால்களின் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. வண்டலுார் உயிரியல் பூங்கா அருகேயுள்ள வனத்துறை இடத்தில், முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 10:00 மணிக்கு, இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்.விழாவில், நிலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். மேலும், இவ்விழாவில், 500 மரக்கன்றுகள், ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடப்பட உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X