பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை மாணவிகள் அவதி

Added : செப் 24, 2022 | |
Advertisement
பெரியபட்டினம் : ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை 340 மாணவர்கள், 442 மாணவிகள் என 782 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 16 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லாத நிலை

பெரியபட்டினம் : ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.

பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை 340 மாணவர்கள், 442 மாணவிகள் என 782 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 16 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லாத நிலை தொடர்கிறது. 6 கழிப்பறைகள் உள்ள நிலையில் இடைவேளையின் போது ஒரே நேரத்தில்மாணவிகள் கூட்டமாக செல்வதால் சிரமப்படுகின்றனர்.

பெரியபட்டினத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்பைரோஸ்கான் கூறுகையில், மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கான இட வசதியும் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கழிப்பறை செல்ல முடியாததால் மாணவிகள் பெற்றோரிடம் கூறி அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.எனவே, மாணவிகள் நலன் கருதி தூய்மை பாரத இயக்க ஊரக திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X