மாணவிகளை​ கத்தியை காட்டி மிரட்டிய மூவருக்கு தர்ம அடி

Added : செப் 24, 2022 | |
Advertisement
கமுதி : கமுதி அருகே பள்ளி மாணவியை​கத்தியை காட்டி மிரட்டிய அருங்குளம் பிரவீன், வீரசோழன் சஞ்சய், மேலப்பருத்தியூர் பூப்பாண்டி கைது செய்யப்பட்டனர்.கமுதி அருகே சிலிப்பு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு வெளியூரில் இருந்து வந்த இளைஞர்கள் ஊர் அருகே காட்டுப்பகுதியில் தங்கி மது, கஞ்சா அருந்தி வந்தனர். சிலிப்பி கிராமத்தை சேர்ந்த

கமுதி : கமுதி அருகே பள்ளி மாணவியை​கத்தியை காட்டி மிரட்டிய அருங்குளம் பிரவீன், வீரசோழன் சஞ்சய், மேலப்பருத்தியூர் பூப்பாண்டி கைது செய்யப்பட்டனர்.

கமுதி அருகே சிலிப்பு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு வெளியூரில் இருந்து வந்த இளைஞர்கள் ஊர் அருகே காட்டுப்பகுதியில் தங்கி மது, கஞ்சா அருந்தி வந்தனர். சிலிப்பி கிராமத்தை சேர்ந்த மாணவிகள் எழுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற போது இந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டினர்.அச்சமடைந்த மாணவிகள் பெற்றோருக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து சிலிப்பி கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சீமை கருவேலங்காட்டிற்குள் பதுங்கி இருந்த இளைஞர்கள் 3 பேரை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். பின் மண்டலமாணிக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பரமக்குடி அருகே அருங்குளம் பிரவீன் 24, வீரசோழன் சஞ்சய் 19, மேலப்பருத்தியர் பூப்பாண்டி 19, ஆகியோர் என தெரிந்தது. இவர்களை கைதுசெய்தனர்.சஞ்சய், பிரவீன் மீது பரமக்குடி,பார்த்திபனூர் உட்பட பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X