பவர்கிரிட் நிறுவனத்திற்குபுதிய இயக்குனர் | Dinamalar

'பவர்கிரிட்' நிறுவனத்திற்குபுதிய இயக்குனர்

Added : செப் 24, 2022 | |
புதுடில்லி, :'பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' என்ற பொது துறை நிறுவனத்தின் புதிய நிதி இயக்குனராக ஜி.ரவிசங்கர் பதவி ஏற்றுஉள்ளார்.பவர்கிரிட் கார்ப்பரேஷனின் நிதி இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ரவிசங்கர், சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையில் கணிதம் பயின்றவர். இதற்கு முன், இந்நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருந்தார். தற்போது, புதிய இயக்குனராக பதவி ஏற்றுள்ள
'பவர்கிரிட்' நிறுவனத்திற்குபுதிய இயக்குனர்

புதுடில்லி, :'பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' என்ற பொது துறை நிறுவனத்தின் புதிய நிதி இயக்குனராக ஜி.ரவிசங்கர் பதவி ஏற்றுஉள்ளார்.பவர்கிரிட் கார்ப்பரேஷனின் நிதி இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ரவிசங்கர், சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையில் கணிதம் பயின்றவர். இதற்கு முன், இந்நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருந்தார். தற்போது, புதிய இயக்குனராக பதவி ஏற்றுள்ள இவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவு, சார்பு நிலையங்கள், மண்டல தலைமையகம் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துஉள்ளார். இந்நிறுவனத்தில் 32 ஆண்டு கால நீண்ட அனுபவம் உள்ள ரவிசங்கர், தேசிய மேலாண்மை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். மேலும், உலகளாவிய மேலாண்மை போட்டிக்காக, இந்தியா சார்பாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X