கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,700 கோடி பயிர் கடன்

Added : செப் 24, 2022 | |
Advertisement
சென்னை:கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில் இதுவரை, 4.87 லட்சம் விவசாயிகளுக்கு, 3,700 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.சென்னை தவிர்த்த, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குகின்றன. அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு, 7 சதவீதம் வட்டி.குறித்த காலத்திற்குள்

சென்னை:கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில் இதுவரை, 4.87 லட்சம் விவசாயிகளுக்கு, 3,700 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை தவிர்த்த, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குகின்றன. அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு, 7 சதவீதம் வட்டி.குறித்த காலத்திற்குள் கடனை அடைத்து விட்டால், வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
2021 -- 22ம் நிதியாண்டில், 14.48 லட்சம் விவசாயிகளுக்கு, 10 ஆயிரத்து 292 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டன.நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் இதுவரை, 4.87 லட்சம் விவசாயிகளுக்கு 3,700 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.அதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும், 65 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு, 453 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பயிர் கடன் வழங்குவதில், அதிக கெடுபிடி காட்டாமல் விரைந்து வழங்குமாறு, வங்கி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப் பட்டுஉள்ளது.தாமதம் செய்வது, 'கமிஷன்' கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, விவசாயிகள் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தலைமுறையை சேர்ந்த விவசாயிகளுக்கு, பயிர் கடன்கள் வழங்குவதில் முன்னுரிமை தரப்படுகிறது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்று, விவசாய பணிகளை மேற்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X