நவராத்திரி கலை விழாவரும் 26ல் துவக்கம்| Dinamalar

நவராத்திரி கலை விழாவரும் 26ல் துவக்கம்

Added : செப் 24, 2022 | |
உடுமலை:உடுமலை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி கலை விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது.உடுமலை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலைவிழா வரும் 26ம் தேதி முதல் அக்., 6ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி, தினமும் காலை, 7:30 மணிக்கு அபிேஷகம், லலிதா சகஸ்ரநாமம், மாலையில் தீபாராதனை நடைபெறும்.விழாவின் போது ஒவ்வொரு நாளும்,

உடுமலை:உடுமலை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி கலை விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது.உடுமலை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலைவிழா வரும் 26ம் தேதி முதல் அக்., 6ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி, தினமும் காலை, 7:30 மணிக்கு அபிேஷகம், லலிதா சகஸ்ரநாமம், மாலையில் தீபாராதனை நடைபெறும்.விழாவின் போது ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. முதல் நாளில் 26ல் வஜ்ர ப்ரஸ்தாரணி தேவி அலங்காரம், 27 ல் மகாசக்தி மாரியம்மன், 28 ல் நாக கன்னி அம்மன், 29 ல் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரர், 30 ல் பால திரிபுர சுந்தரி அலங்காரம் இடம் பெறுகிறது.அக்., 1ல் பள்ளி கொண்ட ரங்கநாதர், 2ல் சட்டு சதாஸ்து தேவி, 3ல் வராக அவதாரம், 4ல் ஹம்ச வாஹினி அலங்காரம் நடக்கிறது. அக்., 5ம் தேதி மாலையில், வெள்ளி குதிரை வாகனத்தில் ஜண்டை மேளத்துடன் அம்மன் திருவீதி உலாவும், 6ம் தேதி காலையில் 102 கலச பால் குடம் ஊர்வலம், முத்தங்கி அலங்காரம் நடைபெறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X