பருவமழை காலத்தில் மழை நீர் சேகரிப்பு! பரிதாப ஓடைகளால் கேள்விக்குறி

Added : செப் 24, 2022 | |
Advertisement
உடுமலை:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பரிதாப நிலையில் இருக்கும் தடுப்பணைகள், நீர்வரத்து ஓடைகளை துார்வாரி, பராமரிக்க, பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.உடுமலை சுற்றுப்பகுதியில், பரவலாக கடந்த மாதம் மழை பெய்தது. பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு என, மழையின் தாக்கம், அனைத்து

உடுமலை:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பரிதாப நிலையில் இருக்கும் தடுப்பணைகள், நீர்வரத்து ஓடைகளை துார்வாரி, பராமரிக்க, பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.உடுமலை சுற்றுப்பகுதியில், பரவலாக கடந்த மாதம் மழை பெய்தது. பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு என, மழையின் தாக்கம், அனைத்து தரப்பினருக்கும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும், மழை நீர் ஓடைகள், பள்ளங்கள் ஆகியவற்றின் நிலை, நிலத்தடி நீர் மட்டத்துக்கு உதவாத வகையில், பரிதாபமாக காணப்படுகிறது.உடுமலை பகுதியிலுள்ள கிராமங்களில், நிலத்தடி நீர் மட்டத்துக்கு உதவும் குளங்களுக்கு, மழைக்காலங்களில், அருகிலுள்ள ஓடைகள் வாயிலாக, வரத்து கிடைக்கிறது. இந்த ஓடைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.சமீபத்தில், பெய்த மழை நீர் குளங்களில், தேங்கவில்லை. மாறாக, பல இடங்களில், ரோட்டில், பெருக்கெடுத்து ஓடி, மழை நீர் வீணாகியது.


உப்பாறு ஓடை


ஏழு குள பாசன திட்ட குளங்களிலிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் துவங்கும், மழை நீர் ஓடைகள், ஒன்று சேர்ந்து உப்பாறாக மாறுகிறது.இந்த உப்பாற்றின் குறுக்கே பல இடங்களில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.ஆனால், போதிய பராமரிப்பு இல்லாமல், தடுப்பணை சுவர்கள் இடிந்தும், நீர் தேங்கும் பகுதி, மண் மேடாக காட்சியளிக்கிறது. பிற இடங்களில், ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு, மழை நீர் செல்லவே வழியில்லை.வறட்சி நீங்க, கிடைக்கும் மழை நீரை, சேமிக்க வழியில்லாமல், விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள பெரும்பாலான ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போய் வருவதால், குறிப்பிட்ட சீசனில் மழை பெய்தாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வது கேள்விக்குறியாகவே உள்ளது.
குளங்களில் வண்டல் மண் அள்ள, அரசு அனுமதித்ததால், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள குளங்களில், பல ஆயிரக்கணக்கான லோடு வண்டல் மற்றும் கிராவல் மண் அள்ளப்பட்டுள்ளது.இதனால், நீர் தேக்கப்பரப்பு ஆழமாகியிருந்தாலும், நீர்வரத்து அளிக்கும், ஓடைகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது, வேதனைக்குரியதாகும்.வடகிழக்கு பருவமழை துவங்கி, தீவிரமடையும், முன்பு, அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து, மழை நீர் ஓடைகளை மீட்காவிட்டால், மழைக்காலத்தில் வெள்ளமும், கோடை காலத்தில், வறட்சியும், தவிர்க்க முடியாததாகி விடும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X