கிருஷ்ணகிரி தி.மு.க.,வில் 'குஸ்தி'நிர்வாகி 'ஆடியோ' பதிவால் பரபரப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ் எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக, அக்கட்சி பிரமுகர் போர்க்கொடி துாக்கிஉள்ளார்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பிரகாஷ் எம்.எல்.ஏ., உள்ளார். தற்போது தி.மு.க.,வின் உட்கட்சி தேர்தல் முடிந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், மாவட்ட செயலர்களுக்கான தேர்தல் நடக்கிறது.இன்று, கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ் எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக, அக்கட்சி பிரமுகர் போர்க்கொடி துாக்கிஉள்ளார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பிரகாஷ் எம்.எல்.ஏ., உள்ளார். தற்போது தி.மு.க.,வின் உட்கட்சி தேர்தல் முடிந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், மாவட்ட செயலர்களுக்கான தேர்தல் நடக்கிறது.இன்று, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. இதில், பிரகாஷ் எம்.எல்.ஏ., வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், ஓசூர், மத்திகிரியைச் சேர்ந்த மேற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தி.மு.க., துணை அமைப்பாளர் அருள்தாஸ் பேசும், 'ஆடியோ' வெளியாகி வருகிறது.அதில், அவர் கிண்டலாக பேசியுள்ளதாவது:
ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ கத துதி பிரதாப மாவட்ட செயலர் பிரகாஷ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலருக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவரை எதிர்த்து ஜனநாயக ரீதியாக போட்டியிட ஒரு ஆண் மகன் கூட ஓசூரில் இல்லை என்பது வெட்கம், வேதனை, அவமானம்.
தளி தொகுதியிலிருந்து ஓசூருக்கு இடம் பெயர்ந்து, ஓசூரிலிருக்கும் செம்மறி ஆடுகளை மேய்க்கும் பிரகாஷ், 'கிரேட்!'ஓசூரில் இருக்கும் நாம் அனைவரும் வளையல், சேலை கட்டிக் கொள்வோம். பிரகாஷ் நினைப்பு கூடிய விரைவில் தவிடுபொடியாகும். மாவட்ட செயலருக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவோம்; அனைவரும் இணையுங்கள்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X