தி.மு.க.,வினர் பேச்சு ஹிந்துக்களுக்கு எரிச்சல் பா.ஜ., வேலுார் இப்ராஹிம் பேட்டி

Added : செப் 24, 2022 | |
Advertisement
சிவகங்கை:''தி.மு.க., எம்.பி.,க்களின் ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு அக்கட்சியில் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது,'' என சிவகங்கையில் பா.ஜ., தேசிய செயலாளர் (சிறுபான்மையினர் பிரிவு) வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ., சோதனைக்கு நன்றி தெரிவிக்கிறோம். இது போன்ற சக்திகளை மத்திய, மாநில அரசுகள் உடனே தடை செய்ய

சிவகங்கை:''தி.மு.க., எம்.பி.,க்களின் ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு அக்கட்சியில் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது,'' என சிவகங்கையில் பா.ஜ., தேசிய செயலாளர் (சிறுபான்மையினர் பிரிவு) வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ., சோதனைக்கு நன்றி தெரிவிக்கிறோம். இது போன்ற சக்திகளை மத்திய, மாநில அரசுகள் உடனே தடை செய்ய வேண்டும்.முஸ்லிம்களுக்கு எதிராக என்.ஐ.ஏ., மத்திய அரசும் செயல்படுவதாக சிலர் தவறான தகவலை தெரிவிக்கின்றனர். அது தவறு. காங்., ஆட்சியில் இது வரை வழங்காத அளவிற்கு சிறுபான்மையினர் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு 36 சதவீதம் வரை கூடுதல் நிதி வழங்கியுள்ளது.



இமாம் தலைவர் சந்திப்பு


அண்மையில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத், டில்லியில் உள்ள அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசினை சந்தித்தார். அப்போது ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என பேசியுள்ளனர்.ஆர்.எஸ்.எஸ்., தலைவரை (ராஷ்டிர பிதா) தேச தந்தை என இமாம் அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.

முஸ்லிம், ஹிந்துக்களுக்கு இடையே அழகான கட்டமைப்பை ஆர்.எஸ்.எஸ்., உருவாக்கி வருகிறது.தி.மு.க., அமைச்சர், எம்.பி.,க்கள் ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்துகின்றனர். இதை கண்டிக்கும் பா.ஜ., மாநில, மாவட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்வது கண்டிக்கத்தக்கது.



எரிச்சல்



ஆ.ராஜாவை தொடர்ந்து தர்மபுரி எம்.பி.,செந்தில்குமார் நேற்று முன்தினம் நடந்த பூமிபூஜையின் போது பூஜைக்கு வைத்திருந்த பொருட்களை சேதப்படுத்தினார். இது தி.மு.க.,வில் உள்ள ஹிந்துக்களுக்கு கூட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.திராவிட மாடல் என்றால் ஹிந்துக்களுக்கு எதிரான மாடல் என்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எண்ணத்தை எம்.பி.,க்கள் வெளிப்படுத்துகிறார்களோ என தோன்றுகிறது. இவ்வாறு கூறினார். நகர் தலைவர் எம்.ஆர்., உதயா, பொது செயலாளர்கள் பாலா, சதீஷ் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X