2 சவரனுக்காக புதுப்பெண் கொலைஇருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு| Dinamalar

2 சவரனுக்காக புதுப்பெண் கொலைஇருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Added : செப் 24, 2022 | |
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமணமான 40வது நாளில் புதுப்பெண்ணை கொலை செய்து, 2 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சிவகாசி கீழ்த்திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வமணிகண்டன், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர் 2020ல் பிரகதிமோனிகா 24, என்பவரை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமணமான 40வது நாளில் புதுப்பெண்ணை கொலை செய்து, 2 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகாசி கீழ்த்திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வமணிகண்டன், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர் 2020ல் பிரகதிமோனிகா 24, என்பவரை திருமணம் செய்தார்.திருமணம் முடிந்து 40வது நாளில், மதியம் வீட்டில் பிரகதிமோனிகா வெட்டி கொல்லப்பட்டார். இவர் அணிந்திருந்த தாலியுடன் கூடிய 2 சவரன் தங்கச் செயின் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.


போலீஸ் விசாரணையில் எதிர் வீட்டைச் சேர்ந்த கோடீஸ்வரன் 22, நண்பர் சேகர் டைசன், 22 என்பவருடன் சேர்ந்து, பிரகதி மோனிகாவை கொன்று நகையை கொள்ளையடித்தது தெரிந்தது.மகன் கோடீஸ்வரன் கொலை செய்தது தெரிந்தும் அதை தாய் பரமேஸ்வரி, 42, மறைத்துள்ளார். மூவரையும் சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் கோடீஸ்வரன், சேகர் டைசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், பரமேஸ்வரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X