புதுச்சேரியில் 27ம் தேதி 'பந்த்'

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி:ஹிந்துக்கள் பற்றி தவறாக பேசிய தி.மு.க., - எம்.பி., ராஜா மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரியில் வரும் 27ம் தேதி 'பந்த்' போராட்டத்திற்கு ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து ஹிந்து முன்னணியின் புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் கூறியதாவது: ஹிந்து தர்மத்தின் மீது அவதுாறு பரப்பும் நோக்கத்தில் தொடர்ந்து பொய்யான,

புதுச்சேரி:ஹிந்துக்கள் பற்றி தவறாக பேசிய தி.மு.க., - எம்.பி., ராஜா மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரியில் வரும் 27ம் தேதி 'பந்த்' போராட்டத்திற்கு ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஹிந்து முன்னணியின் புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் கூறியதாவது: ஹிந்து தர்மத்தின் மீது அவதுாறு பரப்பும் நோக்கத்தில் தொடர்ந்து பொய்யான, இழிவான வர்த்தைகளை பயன்படுத்தி ஹிந்து விரோத சக்திகள் பிரசாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் தி.மு.க.,வின் பொது செயலர் ராஜா எம்.பி., - தி.மு.க., கூட்டத்தில் ஹிந்துக்களை பற்றி இழிவாக பேசி உள்ளார். இது ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இழிவான பேச்சை கண்டித்தும், அவர்மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள 32 ஹிந்து சமுதாய அமைப்புகள், ஹிந்து முன்னணி சார்பில் வரும் 27ம் தேதி காலை 5:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படஉள்ளது. இந்த பந்த் போராட்டத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X