இந்தியாவை வல்லரசாக மாற்றும் திறமை மோடிக்கு மட்டுமே உண்டு:சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி| Dinamalar

இந்தியாவை வல்லரசாக மாற்றும் திறமை மோடிக்கு மட்டுமே உண்டு:சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி

Added : செப் 24, 2022 | |
கொடைக்கானல்:-''இந்தியாவை வல்லரசாக மாற்றும் திறமை பிரதமர் மோடிக்கு மட்டுமே உண்டு,''என , விஸ்வஜோதி ஆசிரமத்தை சேர்ந்த சுந்தர வடிவேல் சுவாமிகள் கூறினார். கொடைக்கானலில் அவர் கூறியதாவது: 2024 ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியை கைப்பற்ற சிறப்பு யாகம் நடத்த கொடைக்கானலில் இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க.,

கொடைக்கானல்:-''இந்தியாவை வல்லரசாக மாற்றும் திறமை பிரதமர் மோடிக்கு மட்டுமே உண்டு,''என , விஸ்வஜோதி ஆசிரமத்தை சேர்ந்த சுந்தர வடிவேல் சுவாமிகள் கூறினார்.

கொடைக்கானலில் அவர் கூறியதாவது: 2024 ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியை கைப்பற்ற சிறப்பு யாகம் நடத்த கொடைக்கானலில் இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க., தற்போது சிதைந்து வருவது கவலையளிக்கிறது.


கட்சியை வழிநடத்தும் ஆற்றல் பழனிசாமிக்கு உண்டு. சசிகலா, பன்னீர்செல்வம் வழிநடத்த முடியாது.தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., இருந்தது போல் இந்தியாவில் நிரந்தர பிரதமராக மோடி இருப்பார். நமது நாட்டை வல்லரசாக உருவாக்கும் நல்லாட்சியை தருவார். அந்த திறமை மோடிக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள், நலப்பணிகள் நிறைய தேவைப்படும் நிலையில் தி.மு.க., எம்.பி., ராஜா, ஹிந்துக்கள் குறித்து தேவையற்ற கருத்து கூறி உள்ளார்.


ஹிந்துக்கள் ஓட்டைப்பெற்ற அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும். மனுதர்மம், சனாதனம் ஆகிவற்றை கூறி தேவையில்லாமல் ஹிந்துக்கள் குறித்து பேசுவதை விட்டு, மக்கள் பணிகளை செய்ய வேண்டும். ஹிந்துக்கள் மனதை புண்படுத்திய ராஜாவை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். ராஜா தொடர்ந்து ஹிந்துக்களை இழிவுபடுத்தி தி.மு.க.,வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X