கணியாமூர் மாணவி இறப்பு குறித்து பொய் தகவல்பரப்பிய 5 பேரிடம் விசாரணை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி:கணியாமூர் பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பொய் தகவல் பரப்பிய 5 பேரிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை 'யு டியூப்' போன்ற சமூக வலை தளங்களில் பரப்பி வரும் நபர்கள் மீது கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம்

கள்ளக்குறிச்சி:கணியாமூர் பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பொய் தகவல் பரப்பிய 5 பேரிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை 'யு டியூப்' போன்ற சமூக வலை தளங்களில் பரப்பி வரும் நபர்கள் மீது கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்த வழக்கு விசாரணை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41 (ஏ)ன் படி சம்மன் அனுப்பினர். அதன் படி, சேலம் பள்ளப்பட்டி, சூரமங்கலம் ராஜமாணிக்கம் மகன் நவீன்குமார், 28 உட்பட ஐந்து பேர் புலனாய்வு குழு அதிகாரிகள் முன் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை செய்து, அனுப்பினர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X