பொருட்கள் வாங்கி ரூ.1 கோடி மோசடி தீப்பெட்டி ஆலை உரிமையாளர் கைது

Added : செப் 24, 2022 | |
Advertisement
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வியாபாரத்திற்கு மூலப்பொருட்கள் வாங்கியதற்காக ரூ.1 கோடி தராமல் மோசடி செய்ததாக தீப்பெட்டி ஆலை உரிமையாளர் சிவகுமார் கைது செய்யப்பட்டார்.சிவகாசியை சேர்ந்தவர் நாராயணசாமி 58. இவர் சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் பேப்பர் போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் இருந்து பேப்பர் போர்ட்ஸ் வாங்கி தொழில்

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வியாபாரத்திற்கு மூலப்பொருட்கள் வாங்கியதற்காக ரூ.1 கோடி தராமல் மோசடி செய்ததாக தீப்பெட்டி ஆலை உரிமையாளர் சிவகுமார் கைது செய்யப்பட்டார்.
சிவகாசியை சேர்ந்தவர் நாராயணசாமி 58. இவர் சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் பேப்பர் போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் இருந்து பேப்பர் போர்ட்ஸ் வாங்கி தொழில் செய்து வந்த பால்சாமி மேட்ச் ஒர்க்ஸ் உரிமையாளர்களான ரவிச்சந்திரன், சிவக்குமார், 2018 முதல் 2020 வரை வாங்கிய மூலப்பொருள்களுக்கு ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 680 தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

நாராயணசாமி பணத்தை கேட்டதற்கு முறையாக பதில் அளிக்காமல் மிரட்டி உள்ளனர். விருதுநகர் ஜே.எம்.2., நீதிமன்ற உத்தரவு படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2021 மே மாதம் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் சிவக்குமாரை, மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X