குடும்ப ஆட்சியை துாக்கி எறியும் நேரம் வந்துவிட்டது பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு| Dinamalar

குடும்ப ஆட்சியை துாக்கி எறியும் நேரம் வந்துவிட்டது பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

Added : செப் 24, 2022 | |
காரைக்குடி:தமிழகத்தில் தி.மு.க., குடும்ப ஆட்சியை துாக்கி எறியும் நேரம் வந்துவிட்டது என பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பேசினார். காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் 'வெற்றி வேல், வீரவேல்' என்று முழக்கமிட்டு நட்டா பேச்சை துவங்கினார்.அவர் பேசியதாவது: தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும். தமிழகம் ஒரு புண்ணிய பூமி. மருது சகோதரர்கள், கட்டபொம்மன், சுந்தரலிங்கம்,
குடும்ப ஆட்சியை துாக்கி எறியும் நேரம் வந்துவிட்டது பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

காரைக்குடி:தமிழகத்தில் தி.மு.க., குடும்ப ஆட்சியை துாக்கி எறியும் நேரம் வந்துவிட்டது என பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பேசினார்.

காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் 'வெற்றி வேல், வீரவேல்' என்று முழக்கமிட்டு நட்டா பேச்சை துவங்கினார்.அவர் பேசியதாவது: தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும். தமிழகம் ஒரு புண்ணிய பூமி. மருது சகோதரர்கள், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பூலித்தேவன், வேலுநாச்சியார் உள்ளிட்ட பல சுதந்திர போராட்ட வீரர்களை தந்துள்ளது.பிரதமர் மோடி ஐ.நா சபையில் தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு குறித்து பேசியுள்ளார். தமிழகத்தில் விஞ்ஞானமும் கலையும் கொட்டிக் கிடக்கிறது. தேசிய அரசியலில் மறுக்க முடியாத மாநிலமாக தமிழகம் உள்ளது.


11 திட்டங்கள்


மோடியின் நிர்வாகம் எவ்வளவு சிறப்பானது என்பதை கொரோனா காலத்தில் மக்கள் அறிவார்கள். உலக நாடுகளுக்கு இரண்டரை கோடி இலவச தடுப்பூசி வழங்கியுள்ளோம். விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.27 ஆயிரம் கோடியாக இருந்தது தற்போது ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக 5 மடங்கு உயர்ந்துள்ளது.


ஆயுதங்கள் ஏற்றுமதியில் ஆயிரத்து 500 கோடி என்பதில் இருந்து 8 ஆயிரத்து 400 கோடி இறக்குமதி செய்துள்ளோம். உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்திய பொருளாதாரம் உயர்ந்துஉள்ளது. ஒட்டு மொத்த உற்பத்தி 33 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது. அண்மையில் பிரதமர் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் 11 திட்டங்களை துவங்கி வைத்தார். பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில், ஆயிரத்து 152 வீடுகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து, 10 புராதன சிலைகளும், 222 பாரம்பரிய பொருட்களும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


சாலை மேம்பாடு


சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்துாருக்கு பாதுகாப்பு வழித்தட தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 11 மருத்துவக் கல்லுாரிகள் துவங்கப்பட்டுஉள்ளன. செம்மொழி மையம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் மூன்று மடங்கு நிதியை உயர்த்தி உள்ளது. எட்டு வழி சாலை மற்றும் மேம்பாலத்திற்காக ரூ. 50 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுஉள்ளது.8 துறைமுகங்கள் தமிழகத்தற்கு கொடுக்கப்பட்டு உள்ளது.


கிழக்கு கடற்கரை சாலை மேம்பாட்டு பணிக்காக ரூ.30 ஆயிரத்து 720 கோடி வழங்கப்பட்டு உள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி தமிழகத்திற்கு மூலதனமாக தரப்பட்டுள்ளது. 12.46 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மண் பரிசோதனை அட்டை நுாறு சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 77 லட்சத்து 7 ஆயிரம் குடும்பங்கள் கொண்டு வரப்பட்டுஉள்ளன. 14 லட்சம் வீடுகள் தமிழகத்திற்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 55 லட்சம் கழிப்பறை கட்டட்டப்பட்டுள்ளது.


குடும்ப கட்சிகள்


பிற கட்சிகள் மாநில கட்சிகளாக மாறி வருகின்றன. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. தமிழகத்தில் கருணாநிதி இருந்தார், ஸ்டாலின் வந்துள்ளார். அவரது மகன் வரிசையில் நிற்கிறார்.


மற்றவர்கள் கை தட்டி, பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். தமிழ் இலக்கியங்கள், பாரம்பரியம், கலாசாரத்தை பா.ஜ., மதிக்கிறது. தி.மு.க., விற்கு இதில் எந்த பங்களிப்பும் இல்லை. பிரிவினைவாதம் பேசுகின்றனர். 'நீட்' தேர்வை எதிர்க்கின்றனர். நீட் மூலம் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அதுவும் உள்ளுர் மொழியில் மருத்துவக் கல்வி பெறுகின்றனர். நமக்கு குடும்ப ஆட்சி வேண்டாம். கொள்ளை அடிக்கும் ஆட்சி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆட்சி வேண்டாம். தி.மு.க.,வை துாக்கி எறியும் நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X