'மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யணும்'

Added : செப் 24, 2022 | |
Advertisement
ஈரோடு:ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பிணையம் இல்லா கடன் வழங்க மாநில அரசின் திட்டத்தில், உற்பத்தியாளர்களுடன் சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்கும் கடன் வழங்க வேண்டும். அதற்கான வட்டி சதவீதத்தை, 12ல் இருந்து, 9 ஆக குறைக்க வேண்டும்.தமிழக அரசின் கடன் உத்தரவாத

ஈரோடு:ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பிணையம் இல்லா கடன் வழங்க மாநில அரசின் திட்டத்தில், உற்பத்தியாளர்களுடன் சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்கும் கடன் வழங்க வேண்டும். அதற்கான வட்டி சதவீதத்தை, 12ல் இருந்து, 9 ஆக குறைக்க வேண்டும்.
தமிழக அரசின் கடன் உத்தரவாத திட்டத்தில், மூன்று வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கடன் பெற முடியும் என்பதை மாற்றி, ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்தாலே வழங்க வேண்டும்.
மின்துறையால் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தால், அனைத்து வகை தொழில்களும் பாதிக்கும். தவிர புதிய வைப்பு தொகை அதிகம் என்பதால், தொழில்கள் முடங்கும். வீடுகள், தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும.இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X