பிச்சை எடுக்கும் யானையை மீட்கும் வழக்கில் 'நோட்டீஸ்'

Added : செப் 24, 2022 | |
Advertisement
மதுரை:வளர்ப்பு யானையை பொது இடங்களில் பிச்சை எடுக்க பயன்படுத்தியதால், அதை மீட்கக் கோரி தாக்கலான வழக்கில் வனத்துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை, அனுப்பானடி நிவாஸ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை, மேலமாசி வீதியைச் சேர்ந்த விமலன், 'சுமதி' என்ற பெயரில் யானையை வளர்க்கிறார். இதற்கு, 2016ல் வனத்துறை அனுமதி

மதுரை:வளர்ப்பு யானையை பொது இடங்களில் பிச்சை எடுக்க பயன்படுத்தியதால், அதை மீட்கக் கோரி தாக்கலான வழக்கில் வனத்துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை, அனுப்பானடி நிவாஸ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை, மேலமாசி வீதியைச் சேர்ந்த விமலன், 'சுமதி' என்ற பெயரில் யானையை வளர்க்கிறார். இதற்கு, 2016ல் வனத்துறை அனுமதி சான்று வழங்கியது. உரிமம், 2021ல் காலாவதியானது. அதை விமலன் புதுப்பிக்கவில்லை.
யானையை ஒரு இடத்திலிருந்து வெளியூர்களுக்கு கொண்டு செல்ல அரசு கால்நடை மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்; இதை விமலன் பின்பற்றுவதில்லை.திருவிழா உட்பட பல இடங்களுக்கு வனத்துறையின் அனுமதியின்றி யானையை அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்துள்ளார். வனத்துறை வழக்கு பதிந்துஉள்ளது.விமலன் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், மதுரை மாவட்ட வன அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X