ஒன்றியத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., ஆதரவுடன் தி.மு.க., வேட்பாளர் வெற்றி| Dinamalar

ஒன்றியத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., ஆதரவுடன் தி.மு.க., வேட்பாளர் வெற்றி

Added : செப் 24, 2022 | |
முதுகுளத்தூர்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான மறைமுக தேர்தலில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன் தி.மு.க., வேட்பாளர் சண்முகப்பிரியா வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,விடம் இருந்த தலைவர் பதவி பறிபோனது. தி.மு.க.,விலும் கோஷ்டி பூசலால் இருவர் போட்டியிட்டனர்.ஒன்றியத்தலைவராக இருந்த அ.தி.மு.க., தர்மர் ராஜ்ய சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதால் மே., 27
ஒன்றியத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., ஆதரவுடன் தி.மு.க., வேட்பாளர் வெற்றி

முதுகுளத்தூர்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான மறைமுக தேர்தலில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன் தி.மு.க., வேட்பாளர் சண்முகப்பிரியா வெற்றி பெற்றார்.


அ.தி.மு.க.,விடம் இருந்த தலைவர் பதவி பறிபோனது. தி.மு.க.,விலும் கோஷ்டி பூசலால் இருவர் போட்டியிட்டனர்.ஒன்றியத்தலைவராக இருந்த அ.தி.மு.க., தர்மர் ராஜ்ய சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதால் மே., 27 பதவியை ராஜினாமா செய்தார். துணைத்தலைவர் கண்ணகி கூடுதல் பொறுப்பாக தலைவர் பதவியை கவனித்தார்.


ஊராட்சி ஒன்றியத்தில் 15 கவுன்சிலர்களில் தர்மர் ராஜினாமா செய்ததையடுத்து 14 பேர் இருந்தனர். தி.மு.க., 4, அ.தி.மு.க., 3, சுயேச்சைகள் 7 பேர் ஆவார். நேற்று ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. தி.மு.க., தலைமை சண்முகப்பிரியா தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அ.தி.மு.க., சார்பில் யாரும் அறிவிக்கப்படவில்லை. உட்கட்சி பூசலால் தி.மு.க., தலைமை அறிவித்த சண்முகப்பிரியாவை எதிர்த்து மற்றொரு கவுன்சிலர் நாகஜோதி போட்டியிட்டார்.


நாகஜோதி தேர்தலை சீர்குலைக்கும் வகையில் மை கொண்டு வந்த போது போலீசார் பறிமுதல் செய்தனர்.பின் நடந்த தேர்தலில் சண்முகப்பிரியா அ.தி.மு.க., சுயேச்சைகள் ஆதரவுடன் எட்டு ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். போட்டி வேட்பாளர் நாகஜோதிக்கு 5 ஓட்டுகள் கிடைத்ததாகவும், ஒரு ஓட்டு செல்லாததாகவும் அறிவிக்கப்பட்டது. தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளருக்கு அக்கட்சி கவுன்சிலர்களே ஓட்டளிக்கவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X