வைரஸ், ப்ளூ காய்ச்சலுக்கு சித்த மருத்துவம்| Dinamalar

வைரஸ், 'ப்ளூ' காய்ச்சலுக்கு சித்த மருத்துவம்

Added : செப் 24, 2022 | |
மதுரை:வைரஸ் மற்றும் 'ப்ளூ' காய்ச்சலுக்கு சித்த மருத்துவம் கைகொடுக்கும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த 'சித்தா' டாக்டர் ஜெயவெங்கடேஷ்.அவர் கூறியதாவவைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் மூன்று நாட்களில் குறைந்துவிடும். கடும் வலி, உடல் சோர்வை ஏற்படுத்தி, மருந்துகளின் அவசியமின்றி தானாகவே சரியாகிவிடும். பாக்டீரியாக்களால் உருவாகும் காய்ச்சல் 7 - 10 நாட்கள் பாதிப்பை

மதுரை:வைரஸ் மற்றும் 'ப்ளூ' காய்ச்சலுக்கு சித்த மருத்துவம் கைகொடுக்கும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த 'சித்தா' டாக்டர் ஜெயவெங்கடேஷ்.அவர் கூறியதாவ

வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் மூன்று நாட்களில் குறைந்துவிடும். கடும் வலி, உடல் சோர்வை ஏற்படுத்தி, மருந்துகளின் அவசியமின்றி தானாகவே சரியாகிவிடும். பாக்டீரியாக்களால் உருவாகும் காய்ச்சல் 7 - 10 நாட்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.


சித்த மருத்துவத்தில், 'ப்ளூ' காய்ச்சலை, 'விஷக்காய்ச்சல்' என்கின்றனர். காய்ச்சலின் போது வழக்கத்தை விட அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உப்பு கரைத்த இளம் சூடான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். மூக்கு துவாரம், கண்களை சுத்தம் செய்ய வேண்டும்.


அதிமதுரம், துளசி, ஆடாதோடை, இஞ்சியை கஷாயம் செய்து தேனுடன் கலந்து குடிப்பது நல்லது. இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, சம அளவு தேன் கலந்து இளஞ்சூடாக குடித்தால் தொண்டை கரகரப்பு குறையும்.


குழந்தைகளுக்கு பாலுடன் கால் தேக்கரண்டி சுக்குப்பொடியை கலந்து கொடுக்கலாம். ஆரஞ்சு பழச்சாறு, இனிப்பில்லாத இளநீர், தாளித்த மோர், ரசம் சாப்பிட்டால் உடலில் உள்ள நீர்சத்து சமநிலைப்படும்.பப்பாளி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை சாப்பிடலாம். அரிசி பொரி கஞ்சி, பால் குருணை அரிசி கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி, இட்லி சாப்பிடலாம்.


துளசி, வேப்பம்பூ, முடக்கறுத்தான், முசுமுசுக்கை, துாதுவளை அல்லது இஞ்சி ஏதாவது ஒன்றில் ரசம் வைத்து குடிக்கலாம். துாதுவளை, கறிவேப்பிலை, புதினா, ஓமவல்லி இலை துவையல் சாப்பிடுவது நல்லது.தேன், வெந்நீர், முள்ளு முருங்கை அடை, சுண்டைக்காய் குழம்பு சளித்தொல்லையை நீக்கும். வாந்தி குறைய மிளகு, பெருங்காயத்தை அரைத்து எலுமிச்சம்பழ சாற்றில் கலந்து நாக்கில் தடவலாம்.வறட்டு இருமலுக்கு சுத்தமான நெய்யுடன் வெள்ளை சர்க்கரையை குழப்பி நாக்கு தொண்டையில் தடவினால் தொண்டை வலி குறையும்.


சளி குறையும் வரை குழந்தைகளுக்கு வெளி உணவுகளை தவிர்த்து விட வேண்டும். ஆரஞ்சு பழச்சாறு, பாலில் நனைத்த ரஸ்க், அரிசி பொரி கஞ்சி, குருணை அரிசி கஞ்சி ஆகியவற்றை உணவாக கொடுத்தால் உடல் விரைவில் தேறும்.சித்தா டாக்டர் ஆலோசனைப்படி நிலவேம்பு குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, வெட்டுமாரன் மாத்திரை, பாலசஞ்சிவீ மாத்திரை, சுதர்சன சூரண மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X