விஜயகரிசல்குளத்தில் நாணயம் வணிக முத்திரை கண்டெடுப்பு| Dinamalar

விஜயகரிசல்குளத்தில் நாணயம் வணிக முத்திரை கண்டெடுப்பு

Added : செப் 24, 2022 | |
சிவகாசி:வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வில் உருவம் பொறித்த செப்பு நாணயம், முழுமையான சங்கு வளையல், சுடு மண்ணால் ஆன வணிக முத்திரை கண்டெடுக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சூதுபவளம் போன்ற பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.மேலும் டெரகோட்டாவால் ஆன
விஜயகரிசல்குளத்தில் நாணயம் வணிக முத்திரை கண்டெடுப்பு

சிவகாசி:வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வில் உருவம் பொறித்த செப்பு நாணயம், முழுமையான சங்கு வளையல், சுடு மண்ணால் ஆன வணிக முத்திரை கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சூதுபவளம் போன்ற பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.மேலும் டெரகோட்டாவால் ஆன குழந்தைகள் விளையாட்டு குவளை, பொம்மை, திமில் உடைய காளையின் சிற்பம், பெண் சிற்பம், வணிக முத்திரை போன்றவை கிடைத்தன.


சுடுமண்ணால் ஆன கற்களுடன் கூடிய சுவர் தென்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் உருவம் பொறித்த செப்பு நாணயம், சங்கு வளையல், சுடு மண்ணால் ஆன வணிக முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறியதாவது:இங்கு ஏற்கனவே உடைந்த நிலையில் மட்டுமே சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.


தற்போதுதான் முதல் முறையாக முழுமையான சங்கு வளையல் கிடைத்துள்ளது.இம்மாத இறுதியோடு முதல் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைகிறது. இதுவரையிலும் கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் தொல்லியல் துறை ஆய்வுக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X