அதிக கட்டணம் வசூலித்த கணினி மையத்திற்கு 'சீல்'

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, அதிக கட்டணம் வசூலித்த கணினி மையத்திற்கு, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.திருப்பத்துார் மாவட்டத்தில், இ-சேவை மையம் தனியார் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஜாதி, வருமான சான்றிதழ் என, 15 வகையான சான்றிதழ், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.அரசு கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்வதாக, மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, அதிக கட்டணம் வசூலித்த கணினி மையத்திற்கு, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
திருப்பத்துார் மாவட்டத்தில், இ-சேவை மையம் தனியார் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஜாதி, வருமான சான்றிதழ் என, 15 வகையான சான்றிதழ், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.அரசு கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்வதாக, மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு தகவல் வந்தது.இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து தாசில்தார்களுக்கும் அவர் உத்தரவிட்டார்.
திருப்பத்துார் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று முன்தினம், இ - சேவை மையங்களில் ஆய்வு செய்தனர்.அதில் திருப்பத்துார் அருகே பொம்மி குப்பம் பகுதியில், பாஸ்கரன், 45, என்பவர் நடத்தி வந்த, மக்கள் கணினி மையம் என்ற இ-சேவை மையத்தில் ஆய்வு நடத்தினர்.
அதில், ஒரு சான்றிதழுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையான, 60 ரூபாயை விட கூடுதலாக, 200 ரூபாய் என வசூலித்து சான்றுகள் வழங்கியது தெரிந்தது.இதையடுத்து வருவாய்த்துறையினர் இந்த மையத்தை மூடி, 'சீல்' வைத்து, பாஸ்கரனுக்கு நோட்டீஸ் வழங்கினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X