ஜவ்வரிசி, மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்

Added : செப் 24, 2022 | |
Advertisement
ஆத்துார்:ஜவ்வரிசி, மரவள்ளி கிழங்குக்கு தமிழக அரசு விலை நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலம் மாவட்டம், ஆத்துாரில், தமிழக ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர் முன்னேற்ற நலச்சங்க மாநில தலைவர் துரைசாமி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஜூலை, ஆகஸ்டில், ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ) 6,300 ரூபாய், ஸ்டார்ச் மாவு, 5,300 ரூபாயாக இருந்தது. இதனால் மரவள்ளி கிழங்கு மூட்டை (73

ஆத்துார்:ஜவ்வரிசி, மரவள்ளி கிழங்குக்கு தமிழக அரசு விலை நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்டம், ஆத்துாரில், தமிழக ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர் முன்னேற்ற நலச்சங்க மாநில தலைவர் துரைசாமி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஜூலை, ஆகஸ்டில், ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ) 6,300 ரூபாய், ஸ்டார்ச் மாவு, 5,300 ரூபாயாக இருந்தது. இதனால் மரவள்ளி கிழங்கு மூட்டை (73 கிலோ), 560 ரூபாய் வரை விலைபோனது.
செப்டம்பரில் ஜவ்வரிசி, 4,300 முதல், 4,700 ரூபாய்; ஸ்டார்ச் மாவு, 3,500 முதல், 3,700 ரூபாயாக குறைந்தது. இதனால் மரவள்ளி விலை, 300 முதல், 400 ரூபாயாக சரிந்தது.மேலும் விலை குறையும் என, விவசாயிகள், 10 மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய மரவள்ளி கிழங்குகளை, 7 முதல், 8 மாதங்கள் உள்ள நிலையில் அறுவடை செய்கின்றனர்.இந்த கிழங்குகளை அரவை செய்தால் போதிய மாவுச்சத்து இருக்காது.
போதிய அளவில் ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தி செய்ய முடியாது. அதனால் கரும்பு, நெல் போன்று, ஜவ்வரிசி, மரவள்ளி கிழங்குக்கு தமிழக அரசு விலை நிர்ணயிக்க வேண்டும்.அரசு பள்ளி சத்துணவு திட்டம், கல்லுாரி, அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில், ஜவ்வரிசி உணவு வழங்க வேண்டும்.
அத்துடன் ஜவ்வரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்றால் இத்தொழில் புத்துயிர் பெறும். ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவுகளை, சேலம் சேகோசர்வ் மூலம் விற்றால் ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வர்த்தகம் இருக்கும். கடந்தாண்டில், 400 கோடி ரூபாய் என, வர்த்தகம் குறைந்துள்ளது.தமிழக அரசு தலையிட்டு, சேலம் சேகோசர்வ் மூலம் ஜவ்வரிசி, ஸ்டார்ச் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X