வங்கி கடன் மோசடி மூன்றாண்டு சிறை| Dinamalar

வங்கி கடன் மோசடி மூன்றாண்டு சிறை

Added : செப் 24, 2022 | கருத்துகள் (1) | |
சென்னை:போலி ஆவணங்கள் வாயிலாக கடன் பெற்று, பொதுத் துறை வங்கிக்கு, 39.18 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில், தனியார் நிறுவன இயக்குனர்கள் உள்பட ஆறு பேருக்கு, தலா மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை, டில்லியில், 'கிரண் ஓவர்சீஸ்' என்ற பெயரில், தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

சென்னை:போலி ஆவணங்கள் வாயிலாக கடன் பெற்று, பொதுத் துறை வங்கிக்கு, 39.18 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில், தனியார் நிறுவன இயக்குனர்கள் உள்பட ஆறு பேருக்கு, தலா மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, டில்லியில், 'கிரண் ஓவர்சீஸ்' என்ற பெயரில், தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவன இயக்குனர்களாக ரஞ்சீவ் பத்ரா, 65; அவரது மனைவி கிரண் பத்ரா, 60 செயல்பட்டு வந்தனர்.கடன் பெற்று திருப்பி செலுத்தாமல், வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில், 1998 ஜூன் 27ல், இந்தியன் வங்கி நிர்வாகம் புகார் அளித்தது.


இதன்படி, நிறுவன இயக்குனர்கள் ரஞ்சீவ் பத்ரா, அவரது மனைவி கிரண் பத்ரா, வங்கி அதிகாரிகள் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன் உள்பட 12 பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.இது தொடர்பான வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின், சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி கே.தனசேகரன், நிறுவன இயக்குனர்கள் உள்பட ஆறு பேருக்கு, தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X