ஆரோவில்லில் பதற்றம் மீண்டும் போலீஸ் குவிப்பு| Dinamalar

ஆரோவில்லில் பதற்றம் மீண்டும் போலீஸ் குவிப்பு

Added : செப் 24, 2022 | |
வானுார்:ஆரோவில்லில் இடம் பிரச்னையால், வெளிநாட்டினர் மற்றும் தனியார் இட உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், ஆரோவில்லில், இடையன்சாவடி - குயிலாப்பாளையம் செல்லும் சாலை இடையே நிலம் வாங்கியுள்ளார்.அந்த இடத்தில் வேலி அமைக்க முற்பட்ட போது,
ஆரோவில்லில் பதற்றம் மீண்டும் போலீஸ் குவிப்பு

வானுார்:ஆரோவில்லில் இடம் பிரச்னையால், வெளிநாட்டினர் மற்றும் தனியார் இட உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\


விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், ஆரோவில்லில், இடையன்சாவடி - குயிலாப்பாளையம் செல்லும் சாலை இடையே நிலம் வாங்கியுள்ளார்.அந்த இடத்தில் வேலி அமைக்க முற்பட்ட போது, ஆரோவில் வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம், ஆரோவில் போலீசார் பேச்சு நடத்தி, கடந்த 22 வரை பணியை நிறுத்தினர்.


இதற்கிடையே, நேற்று முன்தினம் திண்டிவனம் நீதிமன்றத்தில், ஆரோவில் வாசிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தடை ஆணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து விட்டார். இதையடுத்து நேற்று காலை 10:30 மணிக்கு, சுப்ரமணியன் தரப்பினர், வேலி அமைக்கும் பணியை மேற்கொண்டனர். தகவலறிந்த 50க்கும் மேற்பட்ட ஆரோவில்வாசிகளான வெளிநாட்டினர் திரண்டு, வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மீண்டும் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் பேச்சு நடத்தினர். வெளிநாட்டினரை அங்கிருந்து அனுப்பினர்.எனினும், வெளிநாட்டினர் சிலர், வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதே இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X